Saturday 21 May 2016

மண் மணக்கும் மருது

தென் தமிழ் நாட்டின் மண்வாசனையை அப்படியே செண்டிமெண்ட் குழைத்து இயக்குனர் முத்தையா உருவாக்கிய முரட்டுசிலையே மருது.

வாயில் கத்தியுடன் ,
வீரம் விளைஞ்ச ஆள் ஆறடி, கட்டுறுதியான உடல், திராவிட நிறமென. பச்சக்குன்னு ஒட்டிக்கொள்கிறார் மருது கேரக்டரில் விஷால். சூறாவளிடா என்ற ஓப்பனிங் சாங்ல் ஹீரோவின் குணம் சொல்லப்பட்டு , குத்துப்பாட்டுடன் ஆரம்பிக்க , கோவிலில் ஸ்ரீதிவ்யா(பாக்யலஷ்மி) வைப்பார்க்க , ஒரு மோதலில்..ஆளுக்காள் அறைந்துக்கொள்ள விஷாலின் பாட்டி(அப்பத்தா) யாக வரும் லீலா விஷாலை காதலிக்க சொல்ல..லவ்ஸ் தான் !

மகள் வயிற்றுப்பேரனைப் பாட்டி எடுத்து வளர்க்க..பாட்டிப்பேரன் செண்டிமெண்ட் -மெயின் டிஷ் படத்தில்.

ராஜப்பாளையத்தை சுற்றியுள்ள கதைக்களம் ! அதன்..தியேட்டர் , மில்..அரசியலிலும் பதவிகளைப்பெற்றுத்தரும் முக்கியப்புள்ளி பயில்வானாக ராதாரவி செம கெத்தாக வருகிறார்..முதலில் இருந்த வில்லத்தனம் போய்..விஷாலுடன் நட்புப்பாராட்டி.தானும் போய் கேரக்டர் ஆர்டிஸ்டாக , அப்ப வில்லனாக அவரால் வளர்த்துவிடப்பட்ட (தாரைதப்பட்டை வில்லன் ஆர்கே ஸ்டூடியோஸ்)சுரேஷ். படு தீவிரமாக கொடுரமாக காட்சி, அதற்கான உடல் என மிரட்டுகிறார்.

அருள்தாஸ், நமோ நாராயணாய ஆகியோரும் வில்லத்தனத்தில் பங்குகேட்கின்றனர்.

வில்லன் தவறு செய்ய அதை ஹீரோ தட்டிக்கேட்க அதற்கான காரணங்களில் செண்டிமெண்ட் முடிச்சுகள் போட்டு இறுதியில் வில்லனை வீழ்த்து , தொடைதெரிய வேட்டியை வரிந்துக்கட்டும் விஷால் மருதுவாக வெற்றிவாகை சூடமுடிச்சுக்களை அவிழ்த்து ரசிக்க வைக்கிறார் டைரக்டர்.

லோடுமேன்..வக்கீல் பெண்ணை விரும்ப அவளுக்காக இறங்கிசெய்யும் வேலைகள் , பரோட்டா சூரியின் காமெடி சேஷ்டைகள் என படம் முன்பாதியில் சிரிக்கவைக்க , பின்பாதியில் ஆக்‌ஷன் சீக்வென்ஸஸ் ல அடித்துத் துவைத்தப்படியே இருக்கின்றனர் ஹீரோவும் வில்லனும்.ஸ்ரீதிவ்யா படுபாந்தமாக தேவையான எக்ஸ்ப்ரெஷன்ஸில் கலக்கி ரசிக்க வைக்கிறார் அடுத்தவீட்டுப்பெண்ணாக.

சூரி அப்பத்தாவுடன் ஆன சீன்ஸ் ரகளை ரகம் ,இரண்டு உணர்ச்சிப்பெருக்கானக் காட்சிகளில் அழவும் வைக்கிறார்.

அறையோ அறை, வெட்டு .குத்து ,டிஷ்டிஷ்யூம் என மண்வாசனையும் புழுதியும் சேர்ந்துப்பறக்க , வசனங்களில் தெறிக்கவிடுகிறார் முத்தையா. கொம்பனில் ஈர்த்தது..எதோ குறைகிறேதே சார் !

அப்பத்தா நீ தெய்வம் என உருகும்போதும்.அப்பத்தாக்குப்பிடித்ததால் அந்தப்பொண்ணை லவ் பண்ணப்போறேன் எனும்போதும், விஷால் தனித்துத் தெறிக்கறார்.

அதிரடியாக பளார்ந்னு தைரியமாக அறையும் ஸ்ரீதிவ்யா , திருமணம் ஆனதும் மிக அடக்கமாக டிபிக்கல் ஹவுஸ் ஆகி ஏமாற்றம் தருகிறார். வக்கீலாக மாரிமுத்து மனைவிப்ப்பெண் என உருகி, கேரக்டரில் ஒன்றியிருக்கிறார்.  சிலம்பம் சுற்றும் அவர் மனைவி, சுரேஷின் அக்கா என அனைத்துப்பெண்களுமே வீராங்கனைகளாக சித்தரிக்கப்படுவதும் , அப்பாத்தா செண்டினெண்ட்ம் ப்ளஸ். ஆனால் இவர்களே புஸ் என ஆவது ஏமாற்றம் பின்வரும் காட்சிகளில்.

அப்பத்தாவின் கொலையை அத்தனைவிலாவரியா காமிப்பது..ஸ்ஷப்ப்பா..மிடில ரகம்.

கதைக்களமும், காட்சிகளும் ஏற்கனவே பார்த்தமாதிரி உள்ளது மைனஸ், அந்தக்குறைதெரியாமல் ஃப்ளாஷ் பேக் திரைக்கதை, வசனங்கள்  ப்ளஸ்.
பல இடங்களில் வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.
அப்பத்தாவாக வரும் லீலாவதி நடிப்பில் ஈர்க்க பின்னணி குரல் மட்டும் அவ்வப்போது வெளி நடப்பு செய்கிறது நடிப்புடன் ஒட்டாமல்.

பெண்மையை சிறப்பித்து, டீசெண்டாக்கிய இயக்குனருக்குப் பாராட்டுகள். டி.இமானின் இசையில் 4 பாடல்கள் : நினைவில் நிற்க முயல்கின்றன. பொருத்தமான ஆர் ஆர் தந்து அரவணைக்கிறார் நம்மையும் திரையில்.

எடிட்ட்ர் பிரவின் , ஆர்ட் டைரக்டர் என அவரவர் வேலையில் பர்பெக்ட் !

வேல்ராஜின் கேமரா வீடு, தோட்டம், மார்க்கெட் என கண்டபடி சவாரி செய்து அழகாக்கி காமிக்கிறது.

குழந்தைகள் தவிர்க்கவேண்டிய வன்முறைக்காட்சிகளை தவிர்த்தால் , ஐட்டம் டான்ஸ், அனாவசிய பாரீன் சாங் இல்லாமல் நம் கிராமிய மணத்துடன் நல்ல எண்டர்டெயின்மெண்ட் படம் இந்த மருது.

#சுமி_சினிமாஸ்

Friday 20 May 2016

திருமணம் தடைபடுவதும்..தள்ளிப்போகவும் காரணம் செல்போன் பேச்சுக்களா ..


திரிசங்கு சொர்க்கத்தில்  திருமணங்கள் அதிகமாவது  அலைபேசியாலா !!
இது தற்போது அதிகம் யோசிக்க வைக்கும் விஷயம்.

திருமணமும் அதனால் மனித மனங்களில் ஏற்படும் குதூகலமும் எவர்க்ரீன் ஆன விஷயங்கள்.
கால மாற்றத்தில் அனைவரது வாழ்விலும்
இன்று டெக்னாலஜியின் உபயோகம் ஆடம்பரம் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அவசியமானது என  சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டது.
நம் தாத்தா பாட்டி நாட்களில்  பால்ய விவாகம் வெகு சாதாரணம் . பெண்கள் வளர்க்கப்படுவதே திருமணத்திற்கென்றும்  எத்தனைப்படி அரிசி  போட்டால் எத்தனைப்பேர் சாப்பிடலாம் , வடாம் வத்தல் , ஊறுகாய் போடுவதிலிருந்து  அரிசி முறுக்கு , கைமுறுக்கு அதிரசம் விருந்து சமையல் என அத்தனையும் பிஞ்சு வயதிலேயே பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்டு , இதெல்லாம்தெரியாமல் திருமணம் செய்விப்பதா என்ற நிலை இருந்தது.

பையன் மட்டுமே சற்று விஷயம் தெரிந்தவனாக இருந்தால் போதும் என்றும் 15, 16 வயதுகளிலும்.. பெண் 7,9 வயதுகளிலும்..திருமணம் நடைபெறும்.
இதில் பெண்ணுக்கு 6 வயதிலிருந்தே , கல்யாணம் , மாப்பிள்ளை , மாமியார் இடிப்பார் , மாமனார் வந்தால் எழுந்து நிற்கணும் இன்னபிற இல்லற இலக்கணங்களும் இணைத்தே சொல்லித்தரப்படும்.

கண் கட்டி காட்டில் விட்டாற்போல் நடைபெறும் திருமணங்களில் பெண் பூப்பெய்தியதும் நல்ல நாள் பார்த்து மண வாழ்க்கை ஆரம்பமாகி பல குழந்தைகள் பெற்று, தம் பேரப் பிள்ளைகளிடம்..நாங்கள் அந்தக் காலத்தில் எத்த்னைக்கட்டுப்பாடுடன் இருந்தோம் தெரியுமா .?? 
சமையலறை வாசற்கதவைத் தாண்டி வெளியே வர மாட்டோம்..பெரியவர்களிடம் அத்தனை பக்தி எனஅடுத்த இளைய தலைமுறையினருக்கு சொல்லித்தரப்பார்க்கலாம் .

தாத்தாக்களோ, எப்படியும் மனைவியை சார்ந்தே இருந்தும்..அசைப்போட்டும் இறுதி நாட்களிலும் பாட்டியின் பெயரை உச்சரித்தப்படியே அவளின்றி நானா என்று உன் கண்ணீல் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்பதும் இப்போது பார்க்க முடிகிறது.எப்படி அறியாவயதில் இணைக்கப்பட்ட மனங்கள் அன்னியோன்யம் வழிய இறுதி வரை பந்தம் சிறக்க , குடும்பம் தழைத்தோங்கியது என்பது இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விஷயமும் , அன்னியோன்யம் ரசிக்கத்தக்கதும் ஆகும். 

அதற்கு அடுத்த தலைமுறையினர் , அப்பா அம்மா பார்க்கும் பெண்கள்/ மாப்பிள்ளைகளை மணம் முடிப்பர். ஆனால்..அதிலும் ஒரு தலைமுறை வித்தியாசத்தை உணர்ந்திட , அன்றிருந்த டெலிபோன் கால்கள் காரணமாக இருந்தன...அவற்றில் பாதி PP கால் ஆக இருக்கும்..ஆபீஸிற்கோ.. வீட்டிற்கோ கால் செய்து..திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் பேசலாமா என்றும் கேட்பது வீரமான செயலாக பையனின் அக்கவுண்ட்டில் கொள்ளப்படும். 

 எப்படியும் பெண்பார்க்கும் சமயத்தில் இதற்கெனவே சிக்கும் தூரத்து மாமா..பெரியப்பாவோ..நண்பனோ தூது போக , பெண்ணைப் பெற்றவர்கள் சற்றே பிகு செய்ய. .அதற்குள் பேசுவதா..மாப்பிள்ளை கல்யாணத்திற்கு முன்பே முத்தம் கித்தம் கொடுத்துத் தொலைத்தால் என்ன செய்வது என்றுப் புலம்பினாலும்..பீதியை கைவிடாது , அரை குறை மனதுடன் சரி என்பார்கள்.
சில வீடுகளில் சற்றே சிறப்பு சலுகையாக வெளியே சுற்றவும் அனுமதிப்பார்கள். ஆனால் கோவில் மட்டும் எனில் ஓகே என்பார்கள்..கோவில் என்று பெர்மிஷன் வாங்கி , சினிமா பார்த்து வருவதெல்லாம் அந்தக் காலத்து திருமணத்திற்கு முந்திய ரிஸ்க்.

 ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடறா மாதிரி..நான் அப்பவே அப்படி தெரியுமா என்று தனது 25 திருமண நாளில் ..திருமண சிடி பார்த்தப்படியே சிலாகிப்பார்கள்.

ஆனால்..இன்றைய தலைமுறையிநருக்கு அவர்கள் பெறும் உயர்கல்வியும் அதனால் கையில் எடுத்ததும் பெறும் ஐந்திலக்கண சம்பளங்களும்  தாராளமான சுதந்திரத்தையும் பெற்றுத்தருகிறது.
ஓரளவு படித்து , வேலைக்குச்சென்றப் பின்னரே திருமணம்  என்ற கண்டிஷனுடனே பெண்கள் இப்போது  வரன் பார்க்கவே சம்மதிக்கின்றனர். ஆனால் பெற்றோர்களுக்கு மட்டுமே வயிற்றில் ஒருவர் அமர்ந்து புளியைக் கரைத்து கரைத்து குழம்பாக்கிட வரன் பார்க்கும் படலங்களில் இறங்குகின்றனர்.

அன்று, மஞ்சள் பையுடன் புரோக்கர்கள் இருந்த நிலை மாறி இன்று
திருமண தகவல் மையங்கள் மழைக்கு முளைக்கும் காளான்கள் போல முளைத்து அவர்களும்..சேவை செய்ய அனைத்தையும் விழுங்கி சாப்பிடும் நிலையில் வந்தன. ஆன்லைனில் திருமண வரன் பார்க்கும் வெப் சைட்கள் ஒன்றிரண்டு வரன்கள் அல்ல , லட்சத்தில் ஒன்றாக தேர்வு செய்யலாம் என்று விளம்பரமாகக் கட்டியம் கூறுகின்றன.

கம்ப்யூட்டரும் கையுமாகிய இளம் தலைமுறையினர் சிக்கியதும் , சிக்கவைக்கப்படுவதும் இந்த சைட்களில் தான் அதை உபயோகித்து அவர்கள் நவீன கொள்ளையர்கள் ஆனதெல்லாம் கிளைக்கதைகள்.

ஆயிரத்தெட்டு கண்டிஷன்களைத் தாண்டி ஒன்பதாவதாக பெண்கள் போடுவதையும் 
டிக் செய்து உள் நுழையும் ஆண்மகன்கள் முதலில் பறிமாறிக்கொள்வது தனது மொபைல் நண்பர்களைத்தான்.
இதில்
சோஷியல் நெட்வொர்க் கிங்கில் தேடிப்பிடித்து துப்பறிவதும் , வாட்ஸப் பில் எல்லையில்லா மெசேஜ் அனுப்பவதும் தலையாய கடமையாகிறது. 

முதலில், என் ஸ்டேட்ஸ் க்கு லைக் செய்தாயா ? உன் போட்டோக்கு ஏன் இத்தனை லைக் என்று ஆரம்பித்து , ட்விட்டர் ட்ரெண்டிங்க்கில் உள்ளதை தெரியுமா என்றும் , வாட்ஸப்பில் சொன்ன குட்மார்னிங்க்கு பதில் இல்லையே என்பதற்கும் கையின் ஆறாவது விரலாக உள்ள அலைபேசி யே அதிராமல் உறவுகளை சிதைக்கிறது.

பெண்ணோ , பையனோ பொருத்தம் சரியா வரும் போலருக்கே என்று பெற்றோர்களின் மைண்ட் வாய்ஸ் உணர்ந்திடும் தலைமுறையினர் நம்மவர்கள் , உடன் போன் காலிலேயே தமது பேச்சினை துவக்குகின்றனர்.

உனக்கு என்னப் பிடிக்கும் என்பதில் ஆரம்பிப்பது , உண்பது உப்புமாவாவா அல்லது பொங்கலா என்றறியா வண்ணமும் , காபியா டீயா என்று தன்னிலை மறந்து , ஒன்ற ஆரம்பிப்பவர்கள் , பேசாத தலைப்புகள் இல்லையென்றாகி , நடிகர் , நடிகை ரசனையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவதிலிருந்து , உடை , அலங்காரங்களும் தனக்குப் பிடித்தவாறே அமைத்துக்கொள்வதில் காட்டும் தீவிரம் அவர்களின் கோரமான இன்னொரு முகம் வெளித்தெரிய ஆரம்பிக்கிறது.

முதல் சண்டை  , சிலர் உன் அம்மா சொல்லித்தான் நீ என் ஊருக்கு வேறு வேலை மாற்றல் செய்வாயா என்று ஆரம்பித்து உன் அப்பா யாரு என் சம்பளம் பற்றி விசாரிக்க என்றும் நிச்சயமாகும் நிலையில் திருமண பந்தங்களில் ஓட்டை விழ வைக்கும் பேச்சுக்கள் ஆரம்பமாக அடிபோடுகின்றன எல்லைக்கு அப்பால் சென்றிடும் செல்போன் பேச்சுகள்.

எத்தனை கொஞ்சல்கள் என்ற கணக்கை விட எத்தனை ஊடல்கள் என்ற கணக்கும் உடனே அவன் அப்படித்தான் , இல்லை எனக்கு இவன் செட் ஆகாது என்ற பெண்ணின் வாக்குமூலமும் பெற்றோர்களின் கவலைக்கு அச்சாரமிடுகின்றன.

எதையும் எப்போதும் பேசலாம் என்ற மாடர்ன் நாரதர்களாக மாறிப்போகும்  செல்போன் பேச்சுகள் , பல திருமணங்கள் பாதியில் நிற்கவும் காரணமாகின்றன. பெண்களும் , பையன்களும் மாறினாலும் பேச்சு மட்டும் ஒரே மாதிரியே நீள்கிறது . அதிகப்படியான விழிப்புணர்வையும் , எச்சரிக்கையுணர்வையும் இந்தப்பேச்சுக்கள் தந்து திருமணம் என்ற புனிதமான பந்தத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண செய்கின்றன எனலாம்.
திருமணம் ஆகி , நிலவின் ஒளியில் கையோடுக் கைக் கோர்த்தும் , தோளோடு தோள் சேர்த்தும் அலச வேண்டிய பிடித்தவை, பிடிக்காதவை புரிதலுடன் , காதலுடன் அலச வேண்டியவை , உணர்ந்து வாழ்வில் ஸ்டெப் பை ஸ்பெட் ஆக தெரிந்துக்கொள்ள வேண்டிய த்ரில்லுடன் கூட  குணங்கள்அனாவசிய அளவற்ற செல்போன் பேச்சுகளால் நிலைகுலைகின்றன.

முந்தைய இருமனங்களின்தோல்வியை சரிக்கட்டும் , பிரச்சனைகளை முன்கூட்டியே அறியும் வசதிகளை இன்றைய திருமணங்களுக்கு முந்தைய இந்தசெல்போன்பேச்சுக்கள் ஏற்படுத்தித்தந்தாலும்  அவை  சரியான புரிதலுடன் கூடியதாக இருக்கின்றதா என்பதே மில்லியன் டாலர் கேள்வி !!

பலமுறை திரிசங்கு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் பல தோல்விகளைத் தாண்டியே , சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன எனலாம்.
தப்பித்தவறி மீறி நடக்கும் திருமணங்களில் , ரெஜிஸ்டர் ஆபீஸ்களில் கையெழுத்திட்டக் கையோடு , விவாகரத்து வேண்டி கையெழுத்திட நிற்கின்றனர் தம்பதிகள்.
இருவர் பெற்றால் இன்பமயம் , ஒன்று பெற்றால் ஒளிமயம் என்ற திட்டங்களின் படி வீட்டில் ஒன்றான குழந்தைகளின் சகிப்புத்தன்மை இன்மையும் , எதேச்சையாக முடிவெடுக்கும் மன நிலையும் , பெற்றோர்கள் அறிவுரைகளைக்காட்டியும் மேரேஜ் கவுன்சிலர்களின் பேச்சு எடுபடுவதுமே காரணமாகிறது.

ஆண்பிள்ளைகளுக்கு பெண் குழந்தைகளின் பிரச்சினைகளையும்,மனோ நிலையும் பெற்றோர்கள் வளர்க்கும் போதே உணர வைப்பதும், சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவும் சொல்லித்தந்து வளர்க்க வேண்டிய நிலையில் உள்ள பெற்றோர்களின் பொறுப்பு உள்ளது

நான் வளர்கிறேனே மம்மி என்று வளர்ந்திடும் இன்றைய டெக்னாலஜியில் போன் பேச்சுக்களைக்குறைப்பது போகாத ஊருக்கு வழி தேடுவதுப்போலாகும். காதல் திருமணமோ பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமோ பூதக்கண்ணாடி வைத்துப் பிரச்சனைகளை அலசாத வரை வெற்றிகரமான திருமணமாக அமைகிறது.

கறையில்லா சந்திரனோ , சுட்டெரிக்காத சூரியனோ இயற்கையில் இல்லாத ஒன்று என்பதைப்போலவே , குறையில்லா மனிதர்களும் இல்லை என்பதை திருமணத்திற்கு தயாராகும் ஆண், பெண்கள் உணரும் போது திருமணம் டாஸ்ஸில் வென்று  இல்லறம் சிறக்கிறது. 

அருகிலிருப்பவரையும் தூரமாக்கிப்பார்க்கும் செல்போன்களும் , தூரத்தில் இருப்பவரையும் அருகில் வைத்துப்பார்க்கும் இணையமும்  வாழ்வில் குறுக்கீடா வண்ணம் 

அவ்வப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் நாம்  செல்வதும் ஆரோக்கியமான வாழ்விற்குவழிவகுக்கலாம்.

திருமணங்கள் குறைந்த அலைபேசிப் பேச்சுக்களின் வீரியத்தில் செழிப்பதும் , கண்ணோடுக் கண் பார்த்துப்பேசும் போது வளர்வதும் அத்தியாவசிய சமூக தேவையாகிறது. 

சமூகம் செழித்திட இணைய இணைப்புகளையும், செல்லிடப்பேச்சுகளையும் சற்றே இளைப்பாறச் செய்து இன்பம் காண்போம்.

குங்குமம் தோழியில் வெளியானக்கட்டுரை இது :




சினேகிதியுடன் நான்

குமுதம் குழுமத்தின் சினேகிதி இதழின் கணவன் மனைவி ஸ்பெஷலுக்கு ..

கணவனும் , மனைவியும் .. ப்ரெண்ட்லியா இருக்கணும் ந்னா என்ன செய்யலாம் ?

உங்கக் கருத்துகளை சொல்லுங்களேன் என்றார்கள் .அனுப்பினேன் .

அது சென்ற இதழில் வெளியானது..அது உங்களுடன்.

டைம் போவது தெரியாமல் செய்யும் டைம் மிஷின்

24..



தலைப்பிலேயே வித்யாசம் , பிரேம்க்கு பிரேம் ட்விஸ்ட் , என யாவரும் நலம் இயக்குனர் விக்ரம் குமார், 2D சூர்யா தயாரிப்புடன் கைக்கோர்த்துள்ளத்திரைப்படம் 24.

மேகமலை ஸ்டேடட்டில் சயிண்டிஸ்ட் சூர்யாவாக(சேதுராமன்) சாதுவாக அறிமுகம், நித்யா மேனன், குட்டிப்பாப்பா சகிதம் 
தாலாட்டுப்பாடி ஆரம்பிக்க , ப்ரியா சக்ஸஸ் என்றப்படியே படமும் வெற்றிகரமாக ஆரம்பித்து, ஆர்வத்தை விதைக்க, 

வில்லனாக இன்னொரு சூர்யா ஆத்ரேயா என வழக்கமான வில்லன்பாணியில் பலப்படங்களை நினைவுப்படுத்த புதுசா என்ன இருக்கு என்றெண்ணும் போது..ட்விஸ்ட்களை ரிலீஸ் செய்ய ஆரம்பிக்கிறார் விக்ரம்.

ஷாக் அடிக்கும் ஸ்விட்ச் வைத்தே சரண்யா மூலம் இளமை பௌண்டைன் சூர்யா(மணிகண்டன்) மணி..வாட்ச் ரிப்பேரிங் கடை ஓனராக அறிமுகம்..ஆசம் ! 

மகனாக வரும் மணி சூர்யா..துள்ளல் , அழகு, நடிப்பு என மயக்கிப்பார்க்கிறார் ! காதல் காட்சிகளில்..இவருக்கு வயதும் 24 என எண்ணவைக்கும் இளமை பௌண்டைன் சூர்யா <3 .
சமந்தா சத்யா அறிமுகமும் ,

 குடும்ப ஒற்றுமை..ஒருவரைப்பிரிந்ததால் வெள்ளிக்கிழமை தோறும் 6-6 பேசாமல் இருப்பது என அழகான செண்டிமெண்ட் ட்விஸ்ட்..தமிழ் சினிமாவிற்குப் புதிது..அவிழ்த்தவிதத்திற்கு ஆயிரம் லைக்ஸ் ! 

அந்த சமந்தா intro சீனில்..ஷட்டரைத்தூக்கும் காட்சியில்..சத்யனைத்தூக்குவது..ஹில்லாரியஸ் !
சமந்தா - சூர்யா காதலுக்கான காட்சிகள் அதற்காக சூர்யாவின் மணி "மாற்றும்" காட்சிகள் முதலில் கலகலப்பு..பின்னர் சலிப்பு..சற்றே சலசலப்பு.. !  

சமந்தா அப்பாவி, அழகான காதலில் விழும் பெண்..பாத்திரத்திற்கேற்ற நடிப்பு. அழகில் அள்ளுகிறார் மனதை !

நான் ஆத் ரேயா டா என கர்ஜிக்கும் காட்சிகளில் சூர்யா வைப்பார்த்து..வாய் ஆட்டோமேடிக்காக வாவ் என்கிறது.
நியூஸ்பேப்பர் செய்தி..சூர்யா இறப்பு என சரியான டுவிஸ்டும் மறுபாதி என்னவாக இருக்கும் என ஆர்வத்தைவிதைத்த இயக்குனருக்கு பாராட்டுகள் பார்சல் !

சர்ச்சில்..மணி..ஆத்ரேயா காட்சியில் நாற்காலியை இழுத்துப்போட்டு சூர்யாவின் காட்சி, சமந்தா ரூமிற்கு வெளியே மித்ரனின் டயலாக்ஸ் - சூர்யா ஆக்‌ஷன், சூர்யா-சரண்யா மீண்டும் சரண்யா பிறந்த வீட்டிற்குள் நுழைய.. அவரின் அண்ணி...சொம்பைக்கீழேப்போட்டு வீட்டினரை அழைக்கும் காட்சி..(இதுக்கு செமக்ளாப்ஸ் தியேட்டரில் :)) , 

சரண்யா..சூர்யாவிற்கு தாயான கதையில் சரண்யா- சூர்யா நடிப்பு(கிரேட் சீன்..நடிப்பில் செண்டிமெண்டில்..உருக்கிவிட்டனர் இருவரும்) இப்படி பலப்பலக்காட்சிகள் இது தரமானப்படம் என சொல்லாமல் சொல்கின்றன.

க்ளைமேக்ஸ் என்னாகும்..எப்படி மாற்றியமைக்கிறார் மணி என்றெண்ணும் போதே ..அமைத்தவிதம்..திருப்தி..சீட்டின் நுனிக்குக்கொண்டுவரும் காட்சியமைப்புகள்..மீண்டும் பார்சல் பூக்களாய் பாராட்டுகள் குழுவினருக்கு !

இசைப்புயலின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்.. ! மெய் நிகரா..பாடல்வரிகளில் மதன் கார்க்கி தனித்துத்தெரிகிறார்..உலகதரத்தில் இசை..அழகான தமிழ் வார்த்தைகள்...தமிழ் இனி நின்று ஆளும் !

நான் ஒரு வாட்ச் மெக்கானிக்..பேஸிக்கலி..நார்மலி.. எனக்கு இதெல்லாம் கேஷூவலா வரும்..இந்த டயலாக் குறைத்திருக்கலாம்...ஸ்ஷப்பா..என வாய் தானாக சலிப்பை இறக்குமதி செய்கிறது பார்க்கும்போது..அதேப்போல சமந்தா சூர்யா..வீட்டு அட்ரெஸை திரும்ப திரும்பச்சொல்லி....!

 அந்த டூயட் லீட் சீன்..மிக நீளமாய்..பின்னாடி வந்த "நீ அருகினிலே" பாடலை ஒன்றுமில்லாமல் செய்இப்படம்து டிஸ் லைக் பெறுகிறது.
காலம் என் காதலியோ..பாட்டு இன்னமும்..ஸ்ட்ரீட் டான்ஸ் தவிர்த்து..படமாக்கியிருக்கலாமோ ..(நிறையப்பார்த்துட்டோம் இப்படி சூர்யா சார்..வீ வாண்ட் மோர்..சம் திங் டிப்ரண்ட் :))
புன்னகையே பாடல்..இல்லாதது..ஏமாற்றமே ! 

ஆராராரோ அடுத்த ஒரு அழகான தமிழுக்குக்கிடைத்தத் தாலாட்டுப்பாடல் ! லவ்லி சாங்க்..!


டிக் டிக் சத்தமும்.பி ஜி எம்மாக ஒலிப்பது...பின்னணியில் முன்னணி ! :) அளவான அவசியமான பின்னணி இசை ..
திரு வின் கேமரா..வில்..ட்ரெயின் மேலே.. புத்தகத்தின் நடுவிலே சீக்ரட் ரூமிலே..பாலத்தில்..இப்படி படு வேகமாகவும் பயணிக்கிறோம் நாமும்..கூடவே அழகாக சமந்தா..சூர்யா.சரண்யா..நித்யா என விஷூவல் ட்ரீட்டும்...வாவ் வாழ்த்துகள் திரு சார் !

காஸ்டியூம்ஸ் மிகப்பொருத்தமாய் அதிலும் சமந்தா வெகு அழகு..நீ அருகினிலே ' பாடலில்..

தயாரிப்பாளராக சூர்யாவின் நிமிர்கிறார் படைப்பில்..தரத்தில் ! சரண்யா..தனித்துத்தெரிய நெகிழ வைக்க , க்ரீஷ் கர்னாட் , சுதா, மோகன் ராம் அனைவரும் சிறப்பித்துள்ளனர் அவரவர் கேரக்டர்களில்..மிளிர்வுடன்

சேதுராமன் என செக் ல் கையெழுத்துப் போட்டால் செல்லுபடியாகுமா ? ,
 அதிகப்படியான ரிபீட்டட் .. டைம் ப்ரீஸிங் , டைம் டைவேர்ட்டிங் , சேஞ்சிங் சீன்ஸ் புரியாமல் செய்தாலும்..ஒரு சீன் மிஸ் பண்ணினீங்கனாலும்..முழுப்படமும் புரியாமல் போகலாம் என மிரட்டியெடுக்கிறார் டைரக்டர் விக்ரம்.

சில மைனஸ்களை தவிர்த்தால்..சிறப்பான திரைக்கதை, இளமையான இசை , அனைத்துமாய்(பக்குவப்பட்ட, கலவையான நடிப்பு) சூர்யா, மெருகூட்ட சமந்தா, வாவ் என சொக்கவைக்கும் போட்டோகிராபி..VFX, 

அத்தனையின் கலவையுமான 24 ,நம்பரில் மட்டுமல்ல..பார்த்து வெளிவந்த 24 மணி நேரமும் சிந்தனையில் சிட்டிங் ஆக உள்ளப்படம் !
ஆசம் சூர்யா சார்..பாராட்டுகள் விக்ரம் மற்றும் குழுவினருக்கும் !


#சுமி_சினிமாஸ்

Wednesday 18 May 2016

பெருங்கடல் காவிரியின் மீது பள்ளிக்கொண்ட அரங்கனின் வைபவம் சொல்லும் திருமாலை பாசுரம்

தமிழ் இலக்கியங்களில் தனி சிறப்பிடம்
பக்தி இலக்கியங்களுக்கு உண்டு.
பக்தியையும் வாழ்வியலையும் பிணைத்து வைத்தனர் இலக்கியங்களாக நம் முன்னோர்கள்.

தமிழ் பக்தி இலக்கியங்களில் வைணவத்தைப்போற்றி , திருமால் மஹாவிஷ்ணுவைப்பற்றி பாசுரங்களை இயற்றிவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் பன்னிருவர். இவர்கள் பாடிய தொகுப்பு நாலாயிரம் , நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப்படுகின்றன.

இதில் அன்றைய சோழமண்டலம் , திருமண்டகக்குடியை பூர்வீகமாகக்கொண்டு , திருமால் பக்தியுடன் வாழ் நாள் தொண்டாக பூத்தொடுத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கும் அருந்தொண்டுப்புரிந்துவந்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார், இவர் இயற்பெயர் விப்ர நாராயணர்.

இவர் இயற்றியவை திருமாலை , திருப்பள்ளியெழுச்சி. திருவரங்கம் , ஸ்ரீரங்கம் கோவிலில் உறையும் பெரிய பெருமாள் அரங்கனை மட்டுமே இவர் பாடியவர் என்ற தகவலுடன், "திருமாலை" யில் அடுத்த பாசுரமாகிய 18 வது பாசுரத்தைக் காண்போமா !!




பாசுரம் :

இனிதிரைத்திவலை மோத எறியும்தண் பரவைமீதே
தனிகிடந்தரசு செய்யும் தாமரைக் கன்ணனென்ம்மான்
கனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவியனே !

இனி அர்த்தமும்..விளக்கமும்..காண்போம் :

இனி - இனிதான
திரை  - அலை
திவலை - அலையின் துளி
மோத - இனிதாக அடித்து மோத
எறியும் - கொந்தளிக்கின்றன
தண் - குளிர்ந்த
பரவை மீதே - கடலைப்போன்று விரிந்தக் காவிரியின் மீது

தனிக்கிடந்தரசு செய்யும் - தனியாகக்கிடந்தருளி
அரசு செய்யும் - செங்கோல் செலுத்தும்..அரசாட்சி செய்யும்..அரக்கர்களை அழித்து மக்களைக்காத்து அரசு புரியும்
தாமரைக்கண்ணன் - தாமரை ப்போன்ற அழகியக் கண்களைக்கொண்ட கண்ணன்..அரங்கன்
எம்மான் - எமக்கு தலைவன்
கனி இருந்தனைய செவ்வாய் கண்ணனை - கொவ்வைக்கனிப்போன்ற சிவந்த வாயினையுடைய கண்ணன்
கண்ட கண்கள் - தரிசித்தக் கண்கள் (என் கண்களிலேயே நிற்கிறான்)
பனி அரும்பு - குளிர்ந்தக் கண்ணீர் துளிகள்
உதிருமாலே  - கண்களிலிருந்து பெருகுகின்றதே
பாவியேன் - பாவியாகிய (கண்ணாரக்கண்டுக்களிக்க முடியாத) நான்
என் செய்தேன் - என்ன பாபம் செய்தேனோ !

பாசுர விளக்கம் :

அலைகள் உண்டாக்கும் நீர்த்திவலைகள் அரங்கனது திருமேனியை  இனிதாக வந்து அடித்து மோத,
கொந்தளித்தும் குளிர்ந்தும் கடலைப்போன்ற அகன்ற காவிரியின் மேல் தனியாகக்கிடந்து கண் மூடியபடியே , பகைவர்களிடமிருந்து பக்தர்களை காத்து அருளும் , அரசாட்சி செய்யும் தாமைரையைப்போன்ற அழகியக்கண்களைக் காட்டி எம்மை அவன் பால் அன்பு பெருகவைத்த எம் தலைவன் அரங்கனை பெரிய பெருமாளைக் கண்டக் கண்களில் ,
பனித்த்துளிகள் போல கண்ணீர்  பெருகிறதே..அரங்கனை முழுவதும் தரிசித்து அனுபவம் பெறமுடியாத பாவியாகிப்போனேனே நான் என்ன செய்வேன் !

இங்கு .. பரந்த பாற்கடலைப்போல..காவிரியும் பரந்து விரிந்துள்ளதாம். அது கொந்தளித்தும் குளிர்ந்தும் இருக்கிறது.

வைகுண்டத்தில் பள்ளிக்கொண்டுள்ளதைப்போலவே நாராயணன் திருவரங்கத்திலும் பள்ளிக்கொண்டுள்ளான்..
அப்போது காவிரி அலையின் துளிகள்..இனிதாக அவரது திருமேனியின் மீது மோதுகின்றன.

திருவரங்கத்தில் அரங்கன்
தனியாக அருகில் தாயார் இல்லாமல் கிடந்தப்படியே கண் மூடி உள்ளார்.
 இவர் பகைவர்கள் , அசுரர்களை அழித்து  , பக்தர்களைக் காத்து ஆட்சிபுரிகிறார்.

தாமரையை போலுள்ளது அவர் கண்கள்..அந்தக்கண்களில் மயங்கியே  அவர் மேல் அன்பை வெள்ளமாக பெருக வைத்தார்.
அந்தக் கண்களை தரிசிக்கும்போது..பனித்துளிகள் போலே என் கண்ணீர் துளிகள் வந்து திரையிட்டு தடுக்கின்றனவே...

அவர் திருமேனியின் அழகை தரிசிக்க முடியாதப் பாவியாகிப்போகிறேனே என்ன செய்வேன் என தொண்டரடிப்பொடியாழ்வார் புலம்பும் பாசுரம் இது !


பெருமாளைக்காணும்போது மனம் பக்தியில் சுழன்று..அவனது திருமேனி தரிசனம் கண்டவுடன்..கண்கள் கண்ணீர் சொறிகின்றன. அதனால் அவரால் தரிசிக்க முடியவில்லை. ஆகையால்..

அடியேன் என்ன பாபம் செய்தேனோ என்று புலம்பி அரற்றி ஆழ்வார் பாடியுள்ள பாசுரம்..காவிரியின்  சிறப்பையும் ..

அரங்கனின் மேலுள்ள தீராக்காதலையும் உணர வைக்கும் பாசுரம் இது.

இனி அடுத்தப்பாசுரம் ஆழ்வாரின் பாதம் பணிந்துக் காண்போம்.