Monday 31 August 2015

துபாய் மால் - படிப்பவர்களுக்கு ஒரு வரம் ..

படிப்பது வரம்..
அதிலும் ஊக்குவித்து புத்தகங்கள்
வாங்கித் தருவது வரத்தைப்பெற்ற வரம் ! யார் பெற்றார்கள். . ?

பெற்றோரான நாங்கள் தான் !

எங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்த நாள் , எங்கள் பிறந்த நாள்..தடுக்கி விழுந்தா கிப்ஃட் தரலாம் என்றால் அவர்கள் சாய்ஸ் புக்ஸ் தான் !

அதிலும் பையனின் சாய்ஸ்...கீனகோனியா... Kinakuniya -Book world !

(என்னது..நேசமணி பொன்னையா..ந்னு அண்ணாமலை படத்துல வர்ற ஜனகராஜ் காமெடி மாதிரி இருக்கா..இருக்கும் !! :p )

இது ..

துபாயில் உள்ள மிகப்பெரிய.. ஷாப்பிங் மால் ஆன...

துபாய் மாலில் உள்ள ஒரு புத்தகக்கடை !

 (அப்படி என்ன ஸ்பெஷல் இங்கே ..அதானே உங்க மனசுல உள்ள கேள்வி.இதோ வந்துட்டேன்..அதுக்கும் ! )

சும்மா எழுதுவேனா..சொல்லுங்க !!

68,000 சதுர அடியில்..ஜம்முன்னு ஒரு நட்சத்திர ஓட்டல் போல இருந்தா ..

சும்மாவா !!

ஆங்கில , ஜப்பானிய , சீன புத்தகங்கள் , மேகஸின்கள் , அப்பறம்..ஸ்டேஷனரி சாமான்கள்..

குழந்தைகள் விளையாடும் ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன் , ஆக்‌ஷன் பிகர்ஸ் எல்லாம் மெகா சைஸ்ல..விலையா...அதுவும் மெகா விலைதான்..!

நான் எடுத்த பார்த்த மாத்திரத்தில் வச்சுட்டு அதை பக்கத்தில் யாரும் நம் முக ரியாக்‌ஷனைப்பாக்கலையே ந்னு பார்த்து வச்சுப்பேன் !

(ரொம்ப முக்கியம் ந்னு உங்க மை.வாய்ஸ் இங்க கேக்குது ! :p )

பெயரிலேயே இது ஒரு ஜப்பானிய கடைன்னு தெரிஞ்சுக்கலாம்.

இது ஆஸ்திரேலியா , இந்தோனேஷியா..சிங்கப்பூர் இப்படி பல நாடுகளுக்கும் பரவி..இங்கேயும் ஒரு கடை விரிச்சுருக்காங்க.. ! அரை மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் , இல்லாத பிரிவே இல்லைன்னு சொல்லலாம்..!

என் பிள்ளைகளை உள்ள விட்டால்..பெரிய அமௌண்ட் காலியாகும்..எப்போதும்..!
அது வேற விஷயம் !

நம்மை வரவேறபதே , அப்போதைய பதிப்பில் மிக வெற்றிகரமாக விற்பனையாகும் புத்தகங்கள் தான்..நம்மை நகர விடாமல் ப்ளாக் செஞ்சுடும் !

அப்படியே UAE பற்றிய நூல்கள் , ஆங்கில புத்தகங்கள் மிகபிரமாண்டமாக வெளியாகும் போதே இங்கும் ஆகும் ! அப்ப பாருங்களேன் !

இதில் உள்ள ஸ்பெஷாலிட்டியே ...புக்ஸ் இருக்கும் பகுதிகளில்..பார்க்ல உட்கார்ந்து படிப்பதைப்போலவே சின்னதாக ஒரு லயனா குஷன் போட்டுருப்பாங்க..அழகா..புக்ஸ் உடன் செட்டிலாகிடலாம்..நாமும்.பலரும் அப்படி உட்கார்ந்து படிப்பாங்க !

அதில பாருங்க...சில இடங்களில் கொஞ்சம்..உள்ள தள்ளி..ஸ்கொயர் ஷேப் ல சின்ன சின்ன இடத்தில..படிக்கற வசதி இருக்கும்..உலகத்தையே மறந்துடலாம்.!

சின்னக்குழந்தைகள் , புக்ஸ் இருக்கும் பகுதில அவங்க மட்டும் உள்ள நுழைஞ்சுப்போயிட்டு வருபதைப்போல ஒரு அமைப்பு இருக்கும்..இல்லாத குழந்தைகள் புத்தகமே இல்லை எனலாம்.!

அறிவியல் , சமூக அறிவியல் , என்னென்ன துறைகள்...கல்லூரிகளில் இருக்கோ அத்தனைக்கும் புத்தகங்கள் உண்டு..!

மெலுஹா தந்த  அமீஷ் இப்போது இராமரைப்பற்றி எழுத ஆரம்பித்த புத்தகங்கள் வரவேற்றன.

சரி.உங்களுக்கு அங்க என்ன வேலை அதானே !!

முதல் இரண்டு விஸிட்களில்...ஆசையா சில் புக்ஸ் வாங்கினேன்..

 How to make your child to listen you , how to make them to study on themselves .
இப்படி தான் இருக்கும்...

( ம்க்கும்...இது நமக்கே தெரியுமே ந்னு படிச்சது தூங்கறதறது  புக் அலமாரில..அது வேற விஷயம் !! ஹிஹி ) இனி..உணர்ச்சி வசப்படக்கூடாதுன்னு ..

தமிழ் புத்தகங்கள் கிடைக்குமா என நோட்டம் விட்டதில் மருந்துக்கு கூட தமிழ் இல்லை..

( அப்போதே வெளி நடப்பு செய்திருக்கணும்.!! .இல்ல..பசங்களுக்காக  தான் ..:D )

இந்த முறை , பையன் science fiction area ல யும் பொண்ணு ..children books area லயும் செட்டிலாகிட .. கண் ஆனவர் காணோம்.. எங்கப்போயிருப்பார்..பரவால்லயே...Ebooks விட்டு English Book தாவிட்டாரான்னு தேடின படி வந்தால் Facebook ல தஞ்சமாகிருந்தார்..!

சென்ற முறை சென்றிருந்த போது , அரேபி மக்களின்  பழக்க வழக்கங்கள் பற்றி ஒரு புத்தகம் படித்தேன் . இப்போது அது இல்லை ..சரி அப்படியே
சமையல் , வீட்டுப்பராமரிப்பு , DIY ,
கைவேலை இப்படி எல்லா புக்ஸ்ம் அலசிட்டு வர ..(ஒருவரும் இல்லை இந்த பிரிவுகளில் ) .
பிள்ளைகளும்..ஒரு வழியாக வெளி வர... பில் கட்டி வெளில வந்தோம்..

சென்ற முறை வாசலிலேயே வரவேற்றார் மலாலா.. ஜில்லென்று இருந்தது..பார்த்ததும்..இந்த முறை பலர் சிரித்தபடி இருந்தனர்..அட்டையில்.!

நீங்கள் ஒரு புத்தக பிரியர் என்றால் துபாய் வந்தால் அவசியம் உங்கள் கண் பார்வை பட வேண்டிய இடம் இந்த கோனியா !

பின் குறிப்பு : பையன்..அம்மா..உங்க கேமிராவை உள்ள வைங்க..இங்க நோ போட்டோகிராபி ந்னு கையை கட்டிப்போட்டதால ..கூகிளில் சுட்டு சமர்ப்பிக்கிறேன் :D
(அவன் சொன்னதும் தான் கவனிச்சேன்.. நோ போட்டோகிராபி , ஈட்டிங் , டிரிங்கிங் ந்னு.
அதோட..smile , we are monitoring you thro CCTV ந்னு வேற...)

இந்த புக் ஷாப் இருக்குமிடம்...உலகிலேயே பெரிய ஷாப்பிங் மால்..துபாய் மால்..





துபாய் மால் - ஒரு விஸிட் அடிப்போமா .. வாங்க என்னுடன் ..

Dubai Mall.
2004ல் அறிமுகம் இந்த பெயர் !
நான் வேலை செய்த கம்பெனியில், இந்த ப்ராஜெக்ட் க்கு சப் contractor என்ற முறையில் !
சிறந்த கம்பெனிகள் அனைத்தும் பங்கேற்று முடித்த , இன்றைய கணக்கெடுப்பில் அதிகம் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடம் என்ற பெருமையைக்கொண்ட உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் !
பொழுது போக , ஜாலியா ஒரு ரவுண்ட் அப் , இல்லயெனில் கட்டாய விஸிட் நம் விருந்தினர் வருகையின் போது எங்கள் லிஸ்ட்ல் துபாய் மால் உண்டு. !
அப்படித்தான் சென்ற வாரத்தில் இன்னுமொரு விஸிட் இந்த மெகா மாலுக்கு !
கார் பார்க்கிங்க்கே பல தளங்களில் தேடுதல் வேட்டை நடத்தியே பிறகு
கார் , ஓரிடம் கிடைத்து , நான் இங்கேயே இருக்கேன் , நீங்க போயிட்டு வாங்க என்றது !
இது மாதிரியான பெரிய கார் பார்க்கிங் ஏரியாவில் , கார் விடும் போது ஒரு போட்டோ எடுத்து வைத்தப்படியே உள் நுழைவோம் .வரும் போது திரும்பக்கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் ! அன்றும் அப்படியே ! :))
(மால் ந்ன என்ன..! நிறைய கடைகள் , ஒரு food court , cinemas இதானே அப்படின்னு உங்க மை.வாய்ஸ் நல்லா கேக்குது..! அதான் விஷயத்துக்கு வரேன் )
இன்றைய லேட்டஸ்ட் ட்ரெண்ட்ல உள்ள பேஷனில் இளைஞர்கள், ஏறத்தாழ எல்லா நாட்டினரையும் ஒன்றாகப்பார்க்கலாம் இங்கு !
இந்த மால் , 12.1 மில்லியன் சதுர அடியில் .(. செம பிரமாண்டம் இல்ல !! ) 2008 நவம்பரில் திறக்கப்பட்டது ! முழுவதும்முடிய,
மே- 9- 2009 ஆனது .
1200 க்கும் மேற்பட்ட கடைகள் ! அத்தனையும் உலகில் உள்ள தலைசிறந்தவை ..(Branded shops ).
அட , வழக்கமான மால் ல்லருந்து வித்யாசமா மக்களை ஈர்க்கவேண்டும் என்றே கட்டப்பட்டது என புரியவைக்கும் நிறைய அம்சங்கள் உள்ளே...
* The souq -தங்க நகைக்கடைகள் . souq -market அரபிக்ல )
* The village- retail shopping .
* Dubai Aquarium - மிகப்பெரிது..
(இதைப்பற்றியே தனியாக எழுத வேண்டும். ம்ஹூம் விடறதா இல்ல :P)
அண்டர் வாட்டர் ல நடைபாதை..
ரெண்டுப்பக்கமும் சுறாக்கள் மிரட்ட நடந்தவாறே பார்ப்பது பெரும் சுகம்..
* Kidzonia - Innovative Kids edutainment concept.
நிறைய பள்ளிகள்..அவங்க குழந்தைகளை அழைச்சுப்போய் காட்டற ஒரு இடமாச்சு..இதுவும் சங்கர் பட செட் மாதிரி பிரம்மாண்டம் தான் !
* SEGA -Republic , இதுவும் இப்ப நம்ம ராஜமௌலி செட் ரேஞ்சுல உள்ள இண்டோர் தீம் பார்க் !
* Reel Cinemas -22 தியேட்டர்கள் ஒரே இடத்தில்..விதவிதமான படங்கள்..அடுத்தடுத்து..நான்ஸ்டாப் ஸ்கிரீனிங் ..
* Megaplex - அட ! செம..செம ந்னு சொல்வீங்க ..2800 சீட்கள் கொண்ட ஒரு திரையரங்கு..(அம்மாடியோவ் ! மை. பீல் )
* Ice Rink - ஒலிம்பிக் ரேஞ்சுல இருக்கும் இதில் ஒரு மணிக்கு என பணம் கட்டி உள்ளப்போக விதவிதமான ஸ்கேட்டிங் ஷூ..வுடன்..
ஜாலியா ஐஸில் ஸ்கேட் செய்யலாம். (நிறைய பேர் இங்க பாலே வே ஆடுவாங்க )
இந்த ஏரியாவே சரி குளிர் தரும்..அத்தனை டிகிரி கம்மியாக ஐஸ் வைப்பதால்.! smile emoticon
இந்த மாலின் முக்கிய சிறப்பு விருந்தினர்
நடுவில் ஹாய் ந்னு நம்மை பார்த்து சிரிக்கும் அது 155 மில்லியன் வயதான ஒரு டயனோசர் எலும்புக்கூடு.. !
அவ்வளவுதானா..இல்ல இன்னும் இருக்கான்னு கேட்பது புரிகிறது !
ஆங்காங்கே எங்கே இருக்கிறோம் என வழிகாட்ட பெரிய எலக்ட்ரானிக் பலகைகள் இருக்கிறது வழிகாட்ட !
அதில் ஒரு சிறப்பம்சம் அங்கே சில கையில் கட்டக்கூடிய பேண்ட்ஸ் ம் வைத்திருந்தனர். நம் குழந்தைகள் தொலைந்துப்போகாமல் இருக்க , கையில் கட்டி , அதில் டிடெயில்ஸ் எழுதிட அவர்கள் பத்திரமாக நம்மிடம் சேர உதவியாக இருப்பதற்காக.. ! நல்ல ஐடியா இல்ல ந்னு உடன் சபாஷ் சொல்லத்தோன்றியது.
இதில் நாங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தேவைக்காக போவதால் அன்று சற்று சுற்றியதும்..
food court சென்றோம்.
பிள்ளைகளின் சாய்ஸ் பிட்சாவாக இருந்ததால் ஆர்டர் செய்துக்காத்திருந்தோம் !
அன்று வார இறுதி நாளாக இருந்ததால் நல்ல கூட்டம் , என் வழக்கப்படி சுற்றி பார்வையை சுழல விட , வித விதமான ஹேர் ஸ்டைலும் 20-30 வயதுக்குட்பட்ட யுவன்களும் யுவதிகளுக்கு குளுமையூட்ட , அங்கு டேபிள்களை சுத்தம் செய்யும் , ஆப்ரிக்க பெண்மணி சினேகமாக சிரித்தார்..
(திரும்ப ஸ்மைலுக்கு சொல்லியாத்தர வேண்டும் !)..ஸ்மைலினேன் .. நானும்.
வெகு நேரம் என்னைப்பார்த்து புன்னகைத்த வாறே அவர் வேலை யை தொடர்ந்தார்..என் கண்கள் தற்செயலாக சுய பரிசோதனை செய்ததை தவிர்க்கமுடியவில்லை !
கூடவே எதாவது சொல்ல விரும்பறாரோ ந்னு சிந்தனையும் , அப்படி இருந்தால் வரட்டும் எனவும் மனம் சொல்லியது .
சரி, ஏன் வம்பென்று பக்கத்து டேபிளில் பார்வையை செலுத்த ஒரு அரேபிய குடும்பத்தில் தாய் , பாட்டி , 7 வயது மதிக்கத்தக்க சிறுமி அமர்ந்திருந்தனர். உலக அதிசயமாக அந்த அரேபிய பெண்மணி பார்த்து புன்னகைத்தார் !
ஆச்சர்யம் அவர்களுக்கு மொழிப்பிரச்சனையோ என்னவோ தெரியாது! நம்மை பார்ப்பதையே தவிர்ப்பர் !
அந்தப்பெண் எதோ ஒரு உணவைக்குத்தி உண்ண முயற்சிக்க அது தப்பி தப்பி வாய்க்காலில் பாய்ந்து விளையாடும் மீன் போல துள்ளியது !
பீட்சாக்காக வெயிட் செய்த எனக்கு சிரிப்பும் சிந்த..
அந்த அரேபிய பெண்மணி நாசுக்காக வழிந்தார் , அவர் அரபி மொழியில் பேசியதை ..என்ன செய்வது பசங்களுக்கு புரியல என்று நான் மொழிப்பெயர்த்துக்கொண்டேன் !
இங்கேயும் அப்படித்தான் என நானும் புன்னகையாலும் விழி மொழியாலும் தெரியப்படுத்த , பீட்சா வர கபளீகரம் நடந்ததது .
போன புத்தகம் வாங்கும் வேலையை முடித்து , அலைந்த அலுப்புடன் நான் மனம் நிறைந்த இந்த உணர்வுகளுடன் காரில் என்னை புதைத்தேன் ! திரும்ப..!
நாங்க போன மிகப்பெரிய புக் ஷாப் பத்தி நா எழுதின பதிவை நீங்க இங்க படிக்கலாம் ...
https://www.facebook.com/ramesh.sumitha/posts/1011480382215783
இன்னும் வரும்.. இந்த ஹை டெக் ரெங்க நாதன் தெரு tongue emoticon - துபாய் மால் ஸ்பெஷல்.

இதில் நான் எடுத்த போட்டோஸ் தான் யூஸ் செய்திருக்கேன் 


Saturday 29 August 2015

வாடிக்கையாளராக நொந்த சம்பவம்

கோவையில் குழந்தைக்கும் கிடைக்கும் மரியாதை..!

அதிலும்  கிடைத்தது  ஓர் அதிர்ச்சி..

கோவையை விட்டு கிளம்பும் நாள்..பிஸியான நாளில்.. ஒரு சிறிய வெள்ளி அணிகலன்  வாங்க  தேடினேன்..தங்கியிருந்த பகுதிகளில் கிடைக்கவில்லை.. அம்மாவுடன் வெளிசென்று திரும்பிய வேளையில் டாக்ஸி டிரைவரை கேட்க..எங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய வழியில்..ஒரு நகைக்கடை கண்ணில்பட நிறுத்தினார்..

வெயிட்டிங் ல் போட்டு ..சாலையை கடந்து ஓடினேன்..

கண்ணில் பட்ட ஜூவல்லரி ..சற்று பெரிதாக இருக்கவே..நிச்சயம் கிடைக்கும் என உள் நுழைய..செருப்பை வெளியே விட்டு வாங்க..என்றார்..உள்ளே பணியில் இருந்தப்பெண்..விட்டு விட்டு நுழைய..கடையில் கஸ்டமர்ஸ் யாருமில்லை..முதல் தளமும்..ஏசியுடன் இருந்தது..என்ன வேணும் என்றப்பெண்ணை கவனிக்க..சற்று வசதியானவர் போன்றும்..அதிகம் பயிற்சி இல்லாதவர் போன்றும்..முகத்தில் ஒரு சோகமும் தெரிந்தது.

கடையின் முதலாளி என தென்பட்டவர்..கையில் முரட்டு ப்ரேஸிலெட்..கழுத்தில் கொத்தாக தங்கம் மினுமினுக்க நம்ப வைத்தார்..ஒரு படி மேலே போய்...கொத்தடிமை போலவே அந்தபெண்ணிடம் சீறினார்..போ..சும்மா நிக்கற..காமி என..அந்த பெண்ணும் வெகு அடக்கமாக வர..சரி..அவர் பொண்ணோ என்னவோ என..எண்ணி..நாம வந்த வேலையைப்பார்ப்போம் என என் தேவையைக்கூற அவர் எடுத்துத்தர
.பில் 560ரூ...

செலுத்த ..அவரிடம் தான் போக ..இன்னொரு ஆண் விற்பனை யாளரும் இருந்தார் அவருக்கும் அதே ஏக வசன மரியாதை.. ஜெர்க் ஆனது எனக்கு...

நான்..கிளம்பும் நாள் என்பதால் ..கிரேடிட் கார்டு நீட்ட..எடுத்து swipeசெய்தவர்.. எரர் ந்னு வருது..." என்ன கார்டு தந்த நீ "  என்றார்..அதிர்ச்சி தொடர...
" இது இண்டர்நேஷனல் கார்டு..ஓ..உங்க பேங்க்ல பேசுங்க..சில பேங்க்ஸ் அக்செப்ட் பண்ணல..கஸ்டமர் சொன்னாங்க ந்னு சொல்லுங்க..ங்க.".அழுத்தி சொன்னேன்..!!!

" இங்க பக்கத்துல எங்க இருக்கு .ATM "  என்று நான் கேட்டதும்
" ..இப்படியே வலது பக்கமா..போ..அதில் 4 பில்டிங் தாண்டி இருக்கு.."  என்று சொல்லி..மேலும் புரியாதோ.என்றெண்ணி.. அரைகுறை ஆங்கிலம் வேற..அட ராமா..நல்ல கடை என தலையிலடிக்காத குறையாக..

கடையை விட்டிறங்கி..இரு பக்கமும் பார்க்க..இடபுறம் கர் நாடக வங்கி தென்பட , வேண்டியதை எடுத்து உள் நுழைந்ததும்..ஒரு அலட்சிய பார்வை..என்ன அதுக்குள்ள..எடுத்தாச்சா ! ந்னு ஒரு சந்தேகப்பார்வையும்..

கார்டுல எதோ சதி செய்ய முயற்சி செய்த மாதிரி..
அருவருப்பான அந்த முகத்தை...தவிர்த்து பணத்தை தந்தேன்..

( எங்கப்போய் எடுத்த..என கேட்க...
" நான் இங்கே பக்கத்துலயே இருக்கே கர்னாடகா பேங்க்..ATM.., ஏன்..நீங்க பார்த்ததில்லையா..இனிமே அங்கேயே எடுங்க..ங்க அதே அழுத்தத்துடன் பதிலளித்தேன்)

கூட இருந்த உதவியாளர்.. அந்த பெண் எல்லோரும்..PM , CM எதிரில் இருப்பவர்கள் போல..ஒரு அட்டென்ஷனில்..பவ்யமாக இருந்தது மேலும் வெறுப்பு...!!

பணத்தை பெற்றுக்கொண்டு மீதியை தரும்போது அவர் மொபைல் சிணுங்க..அழைப்பை ஏற்று.." ஓ..அவனா..எனக்கு தெரியாது..நா ஒரு நம்பர் தரேன்.. அங்க கேட்டா தெரியும்"  என எதோ கதை ஆரம்பித்தார்..

எதிரில் ஒருவர் இப்போது புளிமூட்டை சைஸில்..இவருக்குமேல்..மெதுவாக....
" அவனா..ஆமா அந்த நம்பர்ல தான் இருப்பான்"   என எனக்கு BP இருப்பதை உணர்ந்தேன்..

விற்பனை யாளர்..பவ்யமாக ஒரு பையில் போட்டு அதை அந்த...(தவிர்க்கிறேன்..சில வார்த்தைகளை.). அந்த ஓனர் தான் தர வேண்டும் ( அப்படி ரூல்) போலருக்கு நீட்ட அதை கையில் வைத்த வாறே இவர் கதை போனில்& நேரில் இருப்பவருடன்..

எனக்கு பொறுமை இழந்து..
" மொதல்ல  வாங்கினத தர்றீங்களா..டைம் ஆச்சு.. அப்பறம் உங்க பேச்சை கண்டினியூவ் செய்ங்க, சற்று கடுமையாக கூற.. "
எதிர்பாராத அவர்.. அலட்சியமா..தரும் முன்..நான் பிடுங்க..பில் கொடுங்க..எனஅதட்டினேன்..

 முறைத்தவாறே..போட்டு அனுப்பு என்றார்..

சர்தான் போய்யா..என்று முணுமுணுத்தவாறே..கதவை  சாத்தி விட்டு வந்தேன்..

எப்படி இவர் கடை இத்தனை பெரியதாய்...மனம் இவ்வளவு சின்னதாய்..,கோவையில் குப்பை கொட்டுகிறார்..என்ற எண்ணத்தில் சூடாக காத்திருந்த டாக்ஸியையடைந்தேன்...

இங்கு உள் நுழைந்ததும் வாடிக்கையாளர்களுக்கு தரும் மரியாதை தேவையற்று கண்முன் வர..இப்படி ஒரு கடையா..என அதிர்ச்சி மேலிட்டது...

அது என்ன கடை..அதானே...!! அது வேண்டாம் விடுங்க ...

இதுவும் ஒரு அனுபவம் .. அவ்வளவே...

அனுபவம் பலவிதம் ..இதில் அதில் ஒரு (வி)இதம்

கோவையில்
ஒரு மாலுக்கு செல்ல டாக்ஸி ..வழக்கமான கம்பெனி தான்..

ஏறி உக்கார்ந்ததும்..ரொம்ப கோபமா இருந்தார்.. டிரைவர்..
கவனித்தால்.கடந்துபோன பைக்கிலிருந்து ஒரு இளைஞன்..இவரை கெட்ட வார்த்தையில் பேச..இவரும் பதில் தர.. நிலமையை சுமுகமாக்க.
"என்ன செய்யறது..இந்த காலத்தில் பசங்க கொஞ்சம் சட்டுன்னு மரியாதை இல்லாமல் பேசிடறாங்க" என நா சொல்ல..
அப்போது ஆரம்பித்தவர்..
வளர்க்கும் விதம் சரியில்லைங்க , இந்த காலத்தில் பெற்றோர்கள்.. பிள்ளைகளுக்கு கேட்டது எல்லாம் வாங்கித்தரறாங்க..நல்லது..கெட்டது..தெரியல..

அதோட சினிமா மட்டும் என்ன..எதெல்லாம் சொல்லித்தரக்கூடாதோ அதைத்தான் சொல்லித்தருது   ....

60 வயசு ஹீரோ..20 வயசுப்பொண்ணொட ஆடிட்டு..கடவுள் என்னை சோதிக்கிறார்..ந்னு சொன்னா நியாயமாங்க..கொஞ்சமாவது சமுதாய பொறுப்பு இல்லையே...இவர் நினைச்சா தடுக்க முடியாதாங்க.." என்றதும்..எனக்கு..உங்களை மாதிரிதான்..எங்க வரார் ந்னு புரிஞ்சு பக்குன்னு இருந்தது. .

சினிமா ஒரு கமர்ஷியல் மீடியா தானேங்க.. பணம் தானே எல்லாம்..அவங்களை வச்சு எத்தனை குடும்பங்கள் சம்பாதிக்கறாங்க..ந்னு நா சொல்லவும்..

என்ன மேடம் பட்டுன்னு உடைச்சிட்டீங்க..அப்ப ஏன் கலையுலகம்..சேவை ந்னெல்லாம் சொல்றாங்க என்றார்..
நான்..ஏன் நீங்க எதாவது பாபுலர் டிவி ஷோல பேசினீங்களா..இப்படி பாயிண்ட்ஸா அடுக்கறீக்களே ந்னதும்...

என்னமேடம்..வாயடைக்க வச்சுடறீங்களே ..சட்டுன்னு சொல்லி சிரித்தார்.. :)

அப்படியே.. பேச்சு..இன்றைய கல்லூரி பெண்கள் பற்றியும் திரும்ப..
" யார் எதை சொன்னாலும்..செஞ்சாலும் நம்பிடறதா...விழிப்புணர்வு வேணும்..மேடம்..அதையும்..நம்பிள்ளைகளுக்கு நாம் சொல்லி தந்தே வளக்க்கோணும்.." என்றார்...கொங்குத்தமிழில்..தீர்க்கமாக..

ஆமாம்..இது நடந்தது கோவையில்...

இவர் விழிப்புணர்வு என்றதும்...நான் சொன்னவழியில் செல்கிறாரா என்று சரிபார்த்தும்கொண்டேன்..
(நம் கவலை. நமக்கு)..

இறக்கி விடும்போது.".ஏண்டா இவன் வண்டில ஏறினோம்ன்னு நினச்சீங்களா.".என்றார் .

நான் " சேச்சே ! அப்படில்லாம் இல்லீங்க.. எத்தனை விஷயத்தை போறபோக்குல..எத்தனை கோர்வயா பேசறீங்க வாழ்த்துக்கள்"  என்றேன்..

இதே ...மரியாதையில் சிறந்த கோவையில் அதற்கு..
.மற்றொரு மாறுபட்ட சம்பவமும் நடந்தது...அதையும் எழுதுகிறேன்..!..

போட்டோ நானெடுக்கலிங்க .. கூகுளில் சுட்டதே , இருந்த பேச்சில் இறங்கினா போதும் இறங்கிட்டேன்.. 

Thursday 27 August 2015

அறிவோம் திருமாலை !

திருமாலை -11.
ஸ்ரீமஹாவிஷ்ணுவின் வனமாலையின் அம்சமாக மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் , அன்றைய சோழ நாட்டில் திருமண்டகக்குடியில் விப்ர நாராயணன் என்ற இயர்பெயருடன் அவதரித்தவர் திருமாலை , திருப்பள்ளியெழுச்சி என்ற இரு வைணவ  தமிழ் அமுதங்களை தந்தருளியவர்  தொண்டரடிப்பொடியாழ்வார் .
இவர் பாடியது அரங்கனை , நேசித்தது திருவரங்கத்தை !
பரமபதத்தில் பள்ளிக்கொண்டுள்ள வாசுதேவன் , மனிதராக அவதரித்த ராமர் , கண்ணனை சரணடையுங்கள் , இல்லறத்துன்பம் தீரும் என்றார் முந்தையப்பாசுரங்களில்.
பாற்கடல் நாதனை தரிசிப்பதோ , காலம் கடந்த ராமனையோ , த்வாபர யுகத்தில் வாழ்ந்த கண்ணனையோ தரிசித்து வழிபடுவது இயலாதக்காரியம் என்பதால்..பெரிய கோவில் என்றழைக்கப்பட்ட திருவரங்கம் வாழ் அரங்கனை வழிபடுங்கள் என்கிறார்.
அதே இப்பாசுரம்.
பாசுரம் -11.
ஒருவில்லோங்குமுன்னீடைத்து உலகங்களுய்ய
செருவிலேயரக்கர்கோனைச்செற்ற நம் சேவகனார்
மருவியபெரியகோயில் மதிள் திருவரங்கமென்னா
கருவிலே திருவிலாதீர் ! காலத்தைக்கழிக்கின்றீரே !
ஒருவில்லோங்கு - எதோ ஒரு வில்லால் ஓங்கி . 
முன்னீரடைத்து - சமுத்திரத்திற்கும் முன் கோபப்பட்டு , மூன்று நீர் கலக்கும் சமுத்திரத்தை வில்லால் ஓங்கி அடைத்து
உலகங்களுய்ய - ஈரேழு உலகங்களும் நிம்மதியாக உய்ய
செருவிலே அரக்கர்கோனை - நேர்மையான முறையில் வெற்றிக்கொண்ட அரக்கர்களின் தலைவனை (இராவணனை)
செற்ற - தோற்கடித்து  நமக்கு உபகாரம் செய்ய வந்த நம் இராமன்
மருவியபெரியகோயில் - (மறுதலித்து) செல்லாமல் தங்கிய அரங்கனாக எழுந்தருளியிருக்கும் பெரியகோயில்
மதிள்திருவரங்கமென்னா - மதிள் சூழ்ந்த பெரியகோவிலைக்கொண்ட திருவரங்கம் என்று எண்ணாமல் 
கருவிலே திருவிலாதீர் - கருவில் இருக்கையிலே பகவானை தரிசிக்காதவர்களே !
காலத்தைக்கழிக்கின்றீரே - வீணாக உண்டும் , உறங்கியும் காலத்தைக்கழிக்கின்றீரே !!
பாசுர விளக்கம் -
இராமாயணத்தில் , சமுத்திரம் தாண்டிச்செல்ல வானர சேனையுடன் ராம லஷ்மணர்கள் காத்திருக்க , விபீஷணன் சுக்ரீவன் மூலம் சமுத்திர ராஜனைப் பணிந்து வேண்டச்சொல்கிறார் இராமனை.
ராமனும் , மூன்று நாட்கள் பட்டினிக் கிடந்து , சமுத்திரக்கரையில் கடக்க வழி வேண்டி , சமுத்திர ராஜனை அழைத்துக்காத்துக்கிடக்க சமுத்திர ராஜன் வரவில்லை.
கோபத்தால் குணக்கடலான ஸ்ரீராமன் , வில்லேந்துகிறார் அதையே ஆழ்வார் இங்கு ஒரு வில்லால் ஓங்கி என்கிறார்.
ஒரு வில்லை  ஓங்கியதால் , மூன்று நீர்களைக்கொண்ட சமுத்திரம் பணிந்திட , அதனால் சமுத்திரத்தை  அடைத்த , கற்பாலம் கொண்டு அதன் மூலம் இலங்கை சென்று இராமன் ,  இராவணன் செய்த கொடுமைகளால் ஈரேழு உலகங்களும் வருந்தி இருக்க , இந்த உலகங்கள் உய்வதற்காக , நேர்மையான, போர்  முறையில் , அரக்கர்களின் தலைவனாக விளங்கிய இராவணனை வெற்றிக்கொண்டவன் , நம் பொருட்டு , நமக்காக உதவ அர்ச்சாவதார மூர்த்தியாக
மறுப்பெதும் தெரிவிக்காமல் தானாகவே தங்கிய , கோயில்  பெரியகோயில்.
அளவாலும் , கேட்டதை உடனே அளிப்பதாலும் பெரிய கோயில் என்றழைக்கப்பட்ட திருவரங்கத்தை எண்ணாதவர்களே !!
நீங்கள் கருவில் இருக்கும்போதே இறைவனை தரிசித்து இருக்க மாட்டீர்களோ !  (இருந்திருந்தால் திருவரங்கம் பற்றி எண்ணத்தோன்றும்)
வீணாக உண்டும் , உறங்கியும் திருவரங்கம் , அரங்கனை நினைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் காலத்தை கழிக்கின்றீர்களே !!
இல்லறத்தில் சிக்குண்டு வாழ வழி தெரியாமல் பல அல்லல்கள் படும் நம் பொருட்டு ஆழ்வார் பல வழிகளை சொல்கிறார் திருமாலை எனும் 45 பாசுரங்களின் வழியே !
திருவரங்கம் என்ற சொல்லே , அரங்கன் என்ற நினைவே ,  பிறப்பறுக்கும் ! இதில் நேரடியாக இராமன் என்றோ , அரங்கன் என்றோ கூறாமல் , இப்பேர்ப்பட்ட சேவகனாக நமக்காக இரங்கிய ராமனே , அரங்கனாக அர்ச்சனைக்குரிய மூர்த்தியாக இங்கு வந்து எழுந்தருளியிருக்கும் போது ! அவரையும் , பெரியகோயிலையும் நினைக்காமல் வீணாக கழிக்க வேண்டாம் என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
ஆழ்வாரின் பாதம் பணிந்து அடுத்த பாசுரம் காண்போம் ...(விரைவில் )

Wednesday 26 August 2015

வைணவத்தில் திளைத்த ஆழ்வார்கள்

Mrs. Thennamai Lakshmanan , வலைப்பதிவர் , கவிஞர் , எழுத்தாளர் ,
இவர் பெயரில் கட்டுரைகள் வர இன்னும் புதிதாக பத்திரிக்கைகள் ஆரம்பிக்க வேண்டும். மற்ற அத்தனையிலும் வந்தாயிற்று ! புத்தகங்கள் வெளியிட்டு அமைதியாக வெளிப்படும் பிரபலம் இவர்.
முதலில் எதேச்சையாக தேனம்மையின் கவிதைகள் என்ற பெயரில் ஒரு பேஸ்புக் ஐடி பார்த்தேன் ! யாரிவர் என அறியத்துவங்கும் ஆவலை அறிந்து நாமெல்லாம் இவர் எழுத்துக்களை படிக்க முடியுமா என்றெண்ணி மலைத்திருந்தேன் .

http://www.honeylaksh.blogspot.ae/ - சும்மா ந்னு ஒரு blog ,எம்மா ந்னு சொல்ல வைக்கும் ! அது இவர் ப்ளாக்.
கோலமா , சமையலா ஜஸ்ட் லைக் தட் .. அள்ளிப்போடறாங்க நம் மனசையும் அவங்க வலைப்பதிவுகளில் .
நான் ப்ரொகிராமிங் மேனேஜராக இருந்த தமிழ்குஷி FM இணைய வானொலி யில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி இன்னொரு ஆர் ஜே நண்பர் செய்ய , தேனம்மை அவர்களது பேச்சும் கேட்டேன் ..குரலையும் கேட்டால் சும்மா இருப்போமா ? அனுப்பினேன் அழைப்பே..ஏற்றார் எளிமையுடன் .
இத்தனை எளிமையா என்று வியக்க வைக்கும் இவர் கமெண்ட்ஸ் பார்த்திருக்கிறேன் . அசால்ட்டாக அள்ளி முடியும் கவிதைகள் படித்திருக்கிறேன்.
அதே  போல் , ஒரு நாள் ...
சுமி , சாட்டர் டே போஸ்ட் ல எனக்கு பெருமாள் ரொம்பப்பிடிக்கும் அவரைப்பற்றி எழுதி தர்றீங்களா ?!  என்ற இன்பாக்ஸ் மெசேஜ் பார்த்தேன் !
கரும்புத்தின்னக்கூலியா ?!  , கண்களைப்படைத்து , தன்னைப்பற்றி தொழ கைகளை தந்து , பாட வாயினைத்தந்து , நல்ல சிந்தனையை தந்த இறைவனைப்பற்றி எழுத கசக்குமா என்ன !
ஆனால் முதல் அனுபவம் , வெளியில் எழுதித்தர அதுவும் பக்திக்கட்டுரை !
மிக பயமாக , தள்ளிப்போட்டே வந்தேன் மணித்துளிகளை !
அப்போது , குருவினைப்பற்றினால் பயம் விலகும் வழிகிடைக்கும் ..குருவாக ஆழ்வார்களை பற்றுவோமே என்றெண்ணி , வைணவத்தில் திளைத்த ஆழ்வார்கள் என்ற தலைப்பில் எழுத சங்கல்பம் செய்துக்கொண்டேன் , அவரும் இசைந்திட சில பாசுரங்களுடன் சுருக்கமாக எழுதி தந்தேன் !
இதோ அவர் பதிவு .
அவர் முன்னுரையும் , டிஸ்கியும் எனக்கு  புன்னகையை அள்ளித்தந்தன.
அதையும் பகிருறேன் . தவறாமல் படித்து செ(சொ)ல்லுங்கள்
--------------------()--------------------
சாட்டர்டே போஸ்ட் :- ஆழ்வார்களும் அரங்கனும் சூடிய சுடர்க்கொடி சுமிதாவும்.
முகநூலில் என் அன்பிற்குரிய தங்கைகளுள் ஒருவர் சுமிதா ரமேஷ். அழகான கவிதைகளும் அதைவிட அழகான அரங்கன் பதிவுகளுமாக மனதைத் தொட்டவர். என்றும் புன்னகை, எளிமை, அசத்தலான பதிவுகள் எனக் கலக்கி வருபவர். முகநூலில் மட்டுமல்ல கூகுள் ப்ளஸ்ஸிலும் இவர் பதிவுகள் பார்த்து அசந்ததுண்டு. அரங்கன் மேல் எனக்கும் பித்தென்றாலும் இவர் வழி தனி வழி. தினமும் தவறாமல் ரசனையோடு அரங்கனைப் பாடிப் பரவிப் புகழும் இவரின் பதிவை என் வலைத்தளத்திலும் வெளியிட ஆவல் மிகுந்தது. 
/// அரங்கனைப் பற்றி நாலாயிர திவ்யப் ப்ரபந்தப் பாடல்களுடன் எனது தளத்துக்காக எழுதித்தரமுடியுமா சுமி. // 
 என முகநூல் உள் டப்பியில் தொடர்பு கொண்டபோது தினம் அரங்கனைப் பற்றி எழுதி வரும் அவர் ஆழ்வார்களைப் பற்றியும் எழுதித் தருவதாகச்சொன்னது களிகூரச் செய்தது. எம்பெருமான் சங்கல்பம். இதையே அவரும் சொன்னது பார்த்து இன்புற்றேன். :)
 வைணவத்தில்  திளைத்த  ஆழ்வார்கள்
 நம் தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியங்கள் இறைவனை ஆண்டவை  நம் மனதையும் என்றென்றும் ஆள்பவை.
அவற்றுள் , வைணவ இலக்கியங்களில் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் ,  ஆழ்வார்கள் எனப்போற்றப்பட்ட பன்னிருவரால் எழுதப்பட்டவை .
பாற்கடலில் துயிலும் பரந்தாமன்  – திருமால் , பூலோகத்தில்  அர்ச்சாவதாரத்தில் அருள்பாலிக்கிறார் பல திருத்தலங்களில் .
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
 வைணவ பக்தியில் திளைத்திருந்தவர்கள் பலரும்   பல திருத்தலங்களில் உள்ள எம்பெருமானின் அழகை , சிறப்பை ,இறை தியானத்தை பல வழிகளிலும் , பூவுலகத்தில் துயர் தீர்ந்து மக்கள் , பிறவா வரம் எனும் மோட்சப்பராப்தியடைய வழிகாட்டி சென்றுள்ளனர். 
இறைவனை அடைய   ஆண்களுக்கு பல வழிகளை உரைத்த  வேதம் ,
பெண்களுக்கு, மனதில் சிந்தித்து , வாயினால் பாடி , மாலவனை தூய மலர்கள் கொண்டு தூவித் தொழுதால் மட்டும் போதும் என்கிறது .
திருமால் , எம்பெருமான் , வராஹ அவதாரத்தின் போது , பூமிப்பிராட்டியாருக்கு கூறியதே,   பூதேவியே  பூவுலகில் கோதை –ஆண்டாளாக ஸ்ரீவில்லிப்புத்தூரில்
பிறந்து நமக்களித்த திருப்பாவை 
மார்கழி மாதம் மட்டுமின்றி , மற்ற நாட்களிலும் திருப்பாவை பாடி , தூய உள்ளத்துடன் ஸ்ரீமஹா விஷ்ணுவை தொழுதிட அவனருள் கிட்டிடுவதோடு , மீண்டும் பிறவா வரமும் அளிக்கிறான் மாதவன் என்பது ஆன்றோர் வாக்கு. 
 *சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
     பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
     குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
     எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
     மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்
சிற்றஞ்சிறுகாலே - பொழுது விடிவதற்கு மிகவும் முன்னால்;
பொருள் - காரணம், பலன் என்னவென்றால்; பெற்றம் - பசுக்கள், கறவைகள்;
குற்றேவல் - உனக்கு பணிவிடை செய்ய, ஏவியதைச் செய்ய; இற்றை - இன்று;
பறை கொள்வான் அன்று - பறையைப் பெற்றுக் கொள்வதற்கு மட்டுமல்ல,  உன் சன்மானத்தை மட்டும் அடைந்து போய் விடுவதற்கு அல்ல;
எற்றைக்கும் - என்றும், காலமுள்ள அளவும்; உற்றோமே - உறவு உடையவர்களே;
ஆட்செய்வோம் - அடிமை வேலை செய்வோம்; காமங்கள் - ஆசைகள்;
முப்பது பாசுரங்களும் படிப்பது இயலாவிடினும் , சிற்றஞ்சிறுகாலை மட்டும் ஆவது சொல்வது  சாலச்சிறந்தது .
ஆண்டாளின் பாதம் தொழுது அவள் காட்டிய வழியில் திருமாலை வணங்கி மற்ற ஆழ்வார்களையும் , எப்படி அவர்கள் வைணவத்தில் திளைத்து , திருமாலை தொழுதனர் என்பதை சுருங்க க்  காணலாம் .
ஆழ்வார்கள் பன்னிருவர் .
முதலாம் ஆழ்வார்களில்  மூவர் பொய்கையாழ்வார் , பூத த் தாழ்வார் , பேயாழ்வார் ,பாடிய பாடல்கள் முதல் திருவந்தாதி , இரண்டாம் திருவந்தாதி , மூன்றாம் திருவந்தாதிஎன நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் இடம்  பெற்றுள்ளது  . தலா 100 பாடல்கள் .
காஞ்சியில் பொய்கையில் அவதரித்த பொய்கையாழ்வாரும் ,  மறு தினம்  திருகடல் மல்லை எனும் மாமல்ல புரத்தில் அவதரித்த பூதத்தாழ்வாரும் , திருமயிலையில் அதற்கு மறு நாள் ஒரு கிணற்றில் அவதரித்த பேயாழ்வார்  ,
இவர்கள் மூவரும்
சிலை வடிவில் அர்ச்சனைக்குரிய மூர்த்தியாக ஆங்காங்கே கோயில்களில் வரும் பக்தர்களை தம் குழந்தையென எண்ணி அவர்தம் கஷ்டங்கள் நீக்கி , அவர்கள் விரும்பும் வரத்தை அருள வீற்றிருக்கும் திருமாலின் அழகு , அவர் தம் எளிமை யை , அவரின் அடியார்களாக , அவரின் புகழை தம் பாடல்களில் பாடியுள்ளனர்.
ஒரு சுவாரஸ்ய சம்பவமாக திருக்கோவிலூரில் மிருகண்டு முனிவரின் குடிலில் இடைக்கழியில் ஒர் மழைக்கால இரவில் மூவரும் சந்தித்த போது தோன்றிய பாசுரங்கள் , அடியவர்க்கு இரங்கும் ஆண்டவனின் பெருமையை நமக்குக்காட்டுகிறது .
முதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -
       வையம் தகளியா வார்கடலே நெய்யாக
        வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
       சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
       இடராழி நீங்குகவே என்று 
  'இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -
       அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
       இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
       ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
       ஞானத் தமிழ்புரிந்த நான். 
 'மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -
       திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
       பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று .
ஒருவர் மட்டுமே படுக்க முடியுமென்று முனிவரால் தரப்பட்ட இட த்தில் மூவர் மழைக்கு ஒதுங்கியப்படி இப்பாசுரங்களை பாடிட , முன்னும் பின்னும் பலர் நெருக்கிட சுகந்தமும் , துளசியின் மணமும் , பக்தர்களும் நெருக்குவதைப்போல் உணர்ந்தனர் .
ஆம் .
இவர்களது அன்பையே மனதில் விளக்காக எண்ணி அதில் திருமாலின் மேலுள்ள பக்தியையே எண்ணெய்யாக்கிட பக்தியில் திளைத்து அங்கு பரந்தாமன் காட்சி தந்திருக்கிறான் தன் பக்தர்களுடன்.
என்னே பக்தி , எளியவனுக்கும் இரங்குபவன் அல்லவா இறைவன் .
திருமழிசையாழ்வார் .. அற்புதமான சற்றே வீரமும் , சிறப்பும் அதிகரிக்க திருமாலைப்பாடியவர் . இவர் எழுதியது நான் முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம்.
நான்முகனை நாரணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத்தான் படைத்தான் - யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேனாழ்பொருளை
சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து.
மொத்தம் 216 பாடல்கள் பாடியுள்ள திருமழிசையாழ்வார் , திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். சிவ பெருமான் மூன்றாவது கண்ணால் எரிப்பேன் என்றும் துச்சமாக எண்ணி திருமாலே ஆதியும் , அந்தமும் அற்ற பரம்பொருள் என்று முழங்கியவர் .
இவர்தம் பெருமை கூறும் பாசுரங்கள் பலப்பல. !
இறுதியாக கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவிலில் முக்திப்பெற்றார் என அறிகிறோம் .
1296 பாடல்களை இயற்றியவர் நம்மாழ்வார் , இவர் திருநெல்வேலி யை அடுத்த ஆழ்வார் திரு நகரில் பிறந்து , தவழும் குழந்தையாக உள்ளபோதே கோவிலின் அருகேயுள்ள பொந்தினுள் புகுந்தவர் , மதுரகவியாழ்வாரின் கேள்விக்குபதிலளிக்க தமது 16 வது வயதில் பேச ஆரம்பித்தார் 37 திருத்தலங்களில் உள்ள எம்பெருமானின் அழகையும் , அதில் தாம் லயித்ததையும் ,நாயிகா பாவத்தில் , தன்னையே பெண்ணாக உருவகப்படித்தி அதில் கண்ணனின் பேரழகை வர்ணித்து , உருகிப்பாடியுள்ளார்.
ரிக் , யஜூர் , சாம, அதர்வண வேதங்களின் சாரமாக திருவிருத்தம் , திருவாசிரியம் ,திருவாய்மொழி , பெரிய திருவந்தாதி நம்மாழ்வாரால் எழுதப்பெற்றவை.
நம் ஆழ்வார் என இறைவனாலே பெயரிடப்பட்ட நம்மாழ்வார் பக்தியில் மூர்ச்சையாகி ,மூர்ச்சையாகி , பின் பல நாட்கள் சுய நினைவின்றி மீண்டு மீண்டும் எழுதவாராம்.
என்னே ஆழ்வாரின் பக்தி !!
நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர் மதுரகவியாழ்வார் இவர் திருக்கோளூரில் பிறந்தவர் , வட நாட்டிலிருந்து , ஒரு கேள்வி குடைந்தெடுக்க பதில் தேடி ஒர் ஒளிக்காட்டிய வழியில் பயணித்து , நம்மாழ்வாரை சரணடைந்தவர். !
மற்ற ஆழ்வார்கள் திருமாலை பணிந்து பாடல்கள் இயற்ற , இவர் தம் குரு ,நம்மாழ்வாரின் பாதம் பணிந்து , அடியார்க்கு அடியாராக "கண்ணி நுண் சிறுதாம்பு " என்று தம் குருவின் பெருமையை 11 பாடல்களில் வெளிப்படுத்தியவர் !
இறைவன் தம்மிடம் பக்திசெலுத்துபவர்களை விடவும் , தம் பக்தர்களின் பால் அன்பு கொண்டு , அவர்களுக்கு சேவை செய்து வரும் பக்தர்களின் பக்தர்களை மிகவும் நேசிக்கிறானாம்.
இதை, திருக்கச்சி நம்பிகள், தீயில் தோன்றிய தேவ நாத பெருமாளிடம்,ஆளவட்ட கைகர்யம் செய்து வரும் வேளையில்  , ”எப்போது எமக்கு வைகுண்டப்பிராப்தி கிட்டும்?” என்று  கச்சி நம்பிகளின் மூலமாக , இறைவனிடம் கேட்டு பதிலாக பெறுகிறார் வைணவம் தழைத்திட பின் வந்த இராமனுஜர்.
குலசேகர ஆழ்வார்
ராம பிரான் மீது அலாதி பக்திக்கொண்டவர் குலசேகர ஆழ்வார் இவர் சேர நாட்டின் மன்னனாக முடி சூடியிருந்த காலத்தில் தம் தேசத்தில் வரும் பாகவதர்களின் இராமாயண சொற்பொழிவில் மிகவும் ஆழ்ந்துப்போய் , சீதையை மீட்க தாமும் தம் சேனைகளுடன் போக விரும்புவதாக கூறி சேனைகளுடன் கடற்கரையில் காலம் கழித்தவர் . அத்தனை ராமபக்தி !
திருவரங்கம் செல்வது தம் வாழ்நாள் லட்சியமாகக்கொண்டு தினமும்.. ஸ்ரீரங்கம் உள்ள திசை நோக்கி தொழும் பக்தி இந்த ஆழ்வாரின் பக்தி.
திருவேங்கடம் வாழ் ஸ்ரீனிவாசனும் , திருவரங்கம் வாழ் அரங்கனின் மேலும் அளவில்லா பக்தியில் திளைத்திருந்த குலசேகர ஆழ்வார்..
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
என்ற பாசுரத்தில் பக்தர்களின் பாதத்துளிகள் படும் படியாக நான் கிடந்து நின் பவள முகம் பார்த்தப்படி இருக்கும் பாக்கியம் வேண்டுமே என்கிறார்.
மெய்சிலர்க்கும் ஆழ்வாரின் பக்தியையறிலாம்.
திருமாலை , திருப்பள்ளியெழுச்சி தந்து , தொண்டர்களுக்கும் அடியவராக திருமால் பக்தியில் சிறந்திருந்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார் , இவரின் இயற்பெயர் விப்ர நாராயணன்.
தாசியின் காமச்சிறையில் விழுந்து அரங்கனின் மேல் இருந்த பக்தியை மறந்தவருக்கு பாடம் புகட்டினான் அரங்கன்.
அவனது லீலைகளால் , மனம் திருந்தி , வைகுண்டம் சென்று வாழும் அந்த உலகம் வேண்டாம் , உன்னுடைய அர்ச்சாவதார மூர்த்தியின் அழகை தரிசித்தப்படி இந்த திருவரங்கம் வாழும் வாழ்வே போதும் என்கிறார் இப்பாசுரத்தில்..
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே.
ஆயர்தம் கொழுந்தே என்னும்,
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே.
பரம்பொருள் திருமால் ஒருவனே , அவனை சரணடைந்தால் மற்ற இப்பூவல துன்பங்கள் யாவும் அழிந்து , இன்ப வாழ்வு பெறலாம் என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரங்களில் அறியலாம்.
பக்தியில் மயங்கி பக்தர்களின் அன்பில் கட்டுப்பட்டு தன்னையும் பாகவதனாக எண்ணுவதில் அரங்கன் செய்த லீலைகள் ஏராளம்.
திருப்பாணாழ்வார்.. இவருக்கு ஸ்ரீரங்கத்தில் பள்ளிக்கொண்ட அரங்கனின் மேல் சிறந்தப் பக்திக்கொண்டவர் , நெற்கதிரில் உதித்த இவர் ,  பாணர்கள் குலத்தில் வளர்க்கப்பட்டார்.
பண்ணிசைத்து தென்காவிரிக்கரையில் நின்றப்படியே அரங்கனை நினைத்து தினமும் பாடுவது அவர் வழக்கம்.
அப்படி ஒரு முறை தன்னை மறந்து பாடிக்கொண்டிருக்கையில் அரங்கனுக்கு பூசை செய்ய நீர் எடுக்க வந்த லோக சாரங்க முனிவர் , இடைஞ்சலாக நின்றுப்பாடிக்கொண்டிருக்கும் பாணர்  தான் ஒதுங்கச்சொல்வதை காதில் வாங்காமல் நிற்பதை பார்த்து அவர் மேல் கல்லெறிய அது நெற்றியில் பட்டு ரத்த ஆறாக ஆனது.
இப்போது அவரை ஆட்கொள்ள எண்ணிய அரங்கனின் நெற்றியிலும் அதே ரத்தம் வழிய, அரங்கன் அசரீரி யாக கூறி அவரை தம் தோளில் சுமந்து அழைத்து வருமாறு முனிவருக்கு ஆணையிட , முனிவர் தோளில் சுமந்து வர , பெரிய பெருமாளின் முன் இறக்கி விடப்பட்டவர் , திருமுடி முதல் திருப்பாதம் வரை சேவித்து அமலனாதிபிரான்எனும் பத்துப்பாடல்களை சமர்ப்பித்து பெரிய பெருமாளின் திருவடியில் நீர் போல மலர்ந்து மறைகிறார்.
எத்தனை எத்தனை பக்தி ! பண்ணால் இசைத்து , இணைந்த ஆழ்வார் திருப்பாணாழ்வார்.
பெரியாழ்வார்   மதுரை மா நகரில் ,விஷ்ணு சித்தர் என்ற இயர்பெயருடன்  ஸ்ரீவில்லிப்புத்தூரில் , வட பத்ர சாயி திருக்கோயிலில் எம்பெருமானுக்கு , பூ கட்டி திருத்தொண்டு புரிந்து வந்தவர் .
 வைணவமே சிறந்தது , திருமாலே பர தெய்வம் , பாண்டியனிடம் என்று நிலை நாட்டிட ,அதைக்கண்டு மகிழ்ந்த இறைவன் கருட வாகனத்தில் மேலே வானத்தில் விரைந்து வர அந்த அழகை குழுமியுள்ள மக்கள் கண்டு அதன் மூலம் இறைவனுக்கு கண் பட்டு விடுமோ என்ற தாயுள்ளத்துடன் பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்தி பாடியுனார் .
திருமணமாகாத பெரியாழ்வார் , துளசி நந்தவனத்தில் ஒரு குழந்தையை பெயரிட்டு தம் மகளாக வளர்த்து , அவளுக்கு கோதை என்ற பெயர் சூட்டி கண்ணனின் கதைகளை மனதில் விதைக்கிறார்.
 வளர்ந்த கோதை நம் ஆண்டாள் , மானுடக்குலத்தில் பிறந்தவரை மணக்க மாட்டேன் என்று அறுதியிட்டுக்கூற , திருவரங்கம் வாழ் அரங்கனையே மணப்பேன் என்று சூளுரைத்து , வாரணம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்று ஆயிரம் யானைகளுடன் வந்து திருமால் என்னை மணந்துக்கொள்வான் எனக்கனவு கண்டேன் கூறுகிறார். இது நாச்சியார் திருமொழி மூலம் நாம் அறிகிறோம் . மற்ற ஆழ்வார்கள் பெண்ணாக தன்னை எண்ணி , இறைவனை உருகி பாடிட , பெண்ணாகவே பிறந்து பாடிய ஆண்டாள் சிறப்பான ஆழ்வார் தகுதியையும் பெறுகிறார்.
தகப்பனாக பெரியாழ்வாரும் , சோழ அரசனது ஆணையின் பேரில் ரெங்கனின் சார்பாக அனுப்பப்பட்ட பல்லக்கில் மகளை அனுப்பி.. ஆண்டாள் திருவரங்கத்தில் தங்கி , ஒரு நன்னாளில்.. பெரிய பெருமாளை தரிசித்து , அவரைத்தொட்டு வணங்கிட மறைகிறார்.
வணங்கிய திருமாலையே மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வர் நெகிழ்ந்து , எம் பெருமானின் ஆணைப்படி , ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பி தம் பணியை செவ்வனே செய்து ,வைகுண்டம் சேர்கிறார்.
இவரது பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி 473 பாடல்கள். தாயாக , தன் குழந்தையாக கண்ணனை பாவித்து உருகி பாடியிருக்கிறார் ஆழ்வார்.
இவரே பெரிய ஆழ்வார் என்று அரங்கனாலே அழைக்கப்பட்டவரும் ஆவார்.
எத்தனை சிறப்பான பக்தி !!
அடியார்களை ஆட்கொள்வதில் அரங்கனுக்கு நிகர் அரங்கனே !
திருமங்கை எனும் நாடு அப்போதையை சோழ தேசத்தில் சிற்றரசாக இருந்தது. அதை ஆண்ட மன்னன்  நீலன், இவர்  சேனைத்தலைவரின் மகனாக பிறந்து அரசரானவர் .
 குமுதவல்லி என்ற பெண்ணிற்காக , நாச்சியார்கோவில் பெருமாளிடம் திருசங்கின் இலச்சினைப்பெற்று , திருக்கண்ணபுரம் பெருமாளிடம் , திருமந்திர உபதேசமும் பெற்று, தினமும் 1008 வைணவர்களுக்கு உணவிட்டு , அவர்தம் பாதத்துளியான  நீரைப்பருகி,அவரை மணக்கிறார்.
பின்னர் மனைவியின் ஆசைப்படி வைணவத்தொண்டும் , திருவரங்கம் கோவிலின் மதிலை கட்டும் பணிக்காக பல திருட்டுகள் செய்கிறார்.
அதற்காக திவ்ய தம்பதியராக பெருமாளும் தாயாரும் வந்து நல்வழிக்காட்ட பல பாடல்கள் இயற்றி ஆழ்வாராகிரார் திருமங்கை மன்னன்.
இவர் தம் ஆடல் மா என்ற குதிரையுடன் பல திருக்கோயில்களுக்கும் இறைவனின் திருவுருவை கண்டு பாடியுள்ளார்.
அவை.. பெரியதிருமொழி , திருக்குறுந்தாண்டகம் , திரு நெடுந்தாண்டகம் ,திருவெழுக்கூற்றிக்கை , சிறிய திருமடல் , பெரிய திருமடல் என மொத்தம் 1253பாடல்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் அலங்கரிக்கின்றன.
எம்பெருமானின் புகழையும் , ஆழ்வார்களது சிறப்பையும் பின்னாளில் வந்த ஆச்சார்யர்கள் மக்களிடம் கொண்டு சேர்த் தனர் .
ஆச்சார்யர் , ஆழ்வார்  , திருமகளின் பாதம் பற்றி திருமாலை  சரணடைவோம் .
இதற்கு திருமதி. தேனம்மை அவர்கள் எழுதிய டிஸ்கி..
டிஸ்கி :-
நன்றி சுமி மிக விரிவாக ஆழ்வார்கள் பற்றிப் பகர்ந்தமைக்கு.
நானும் பள்ளிப்பருவத்துக்கு சென்று மீண்டேன். ”ஒருவர் கிடக்கவும், இருவர் இருக்கவும் மூவர் நிற்கவும்” என முதல் மூன்று ஆழ்வார்கள் பற்றிப் படித்திருக்கிறேன். அதைப் பற்றி நீங்கள் மிக சுவாரசியமாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
பாசுரங்களால் அங்கே கமழ்ந்த துளசியும் சுகந்தமும் இங்கேயும் கமழ்கிறது. :) 
நீங்கள் குறிப்பிட்ட திருப்பாவைப் பாடல்கள், பிரபந்தப்பாடல்களை நானும் பள்ளிப் பருவத்தில் கற்று மார்கழி மாதங்களில் அதிகாலை எழுந்து குழலூதும்  ஆயர்பாடிக் கண்ணன் படத்தின் முன் நின்று “ நீலா துங்கஸ்த நகிரி யும் “ “ அன்னவயல் புதுமை ஆண்டாள் அரங்கற்கு “ “ திருவாடிப் பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியே “ பல்லாண்டு பல்லாண்டு “ “ மார்கழித் திங்கள்” “ ஓங்கி உலகளந்த “ என்று அரங்கன் அமுதத்தில் துளைந்தாடி உள்ளேன். எனவேதான் உங்கள் பகிர்வுகளின் மேல் இனந்தெரியாத ஈர்ப்பு.
ஆழ்வார் பாடல்களின் சிறப்பு நம்மையும்  அரங்கனுள் ஆழ்த்திவிடுவதுதான்.. உங்கள் கட்டுரையில் ஆழ்வார்களின் சிறப்பையும் அவர்கள் அரங்கனுக்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டையும் ( எவ்வளவு பாடல்கள், யார் யார் பாடியுள்ளார்கள் என்று ) படித்தவுடன் நம்மையும் அறியாமல் ஒரு அரங்கன் உலா நம்முள்ளே நிகழ்ந்து விடுகிறது.
என்னை போலப் பலரும் தமக்குத் தெரிந்த ஆழ்வார் பாடல்களை நினைவுக்குக் கொண்டு வந்து உச்சரித்திருப்பார்கள். :) 
நன்றி சுமிதா சூடிக்கொடுத்த சுடர்கொடி போல என் வலைத்தளத்துக்காக அரங்கனைச் சூடி ஆழ்வார்களை மாலைகளாக்கித் தொடுத்து அளித்தமைக்கும்., இந்த சனிக்கிழமையை அரங்கனுக்கு அர்ப்பணித்த சிறப்புக்கும்.  வாழ்க வளமுடன். 
மிகுந்த மகிழ்ச்சிப்பூக்களை மேலே அள்ளித்தெளித்ததுப்போல இருந்தது !
நன்றியுடன் இந்தப்பதிவை முடிக்கிறேன்!

தேனம்மை அவர்கள் வலைப்பூ முகவரி , தெரியாத புதியவர்களுக்கு

Monday 24 August 2015

அடடே இதென்ன கலாட்டா

நேர்மைக்கும் உண்மைக்குமெல்லாம் இப்ப மதிப்பு உண்டா ! 
இது நான் அடிக்கடி யோசித்துப்பார்க்கும் கேள்வி !

அதிசயமா இன்று ஷாப்பிங்க்கு கணவரும் வரேன்னு உள்ளே வர ,  சாமான்களை வேற வேற தளங்களில் தனித்தனியே எடுத்துக்கொண்டிருந்தோம் , டைம் மேனேஜ்மென்ட் க்காக. :)

 நான் முதல் தளத்தில் முடித்து , கீழே பொது சாமான்கள் , வேறென்ன அதே சோப்பு , ஷாம்பூ , மளிகை சாமான் வகையறாக்கள் தான் ! ரொம்ப நாளேச்சே இவர் கூட வந்துன்னு நினைத்தவாறே , நான் உள் நுழைய அவர் ட்ராலியுடன் போஸ் தந்தார். அப்பாடா என்றிருந்தது.. வண்டி இன்னிக்கு நாம தள்ள வேண்டாமே ;)

அதற்குள் அங்கு செண்ட் விற்பனையாளர் பெண்ணிடம் செம சுவாரஸ்யமான உரையாடலில் இருந்தார் தலைவர் , சரி நிச்சயம் வாங்கிருக்கணும், என்னனெல்லாம் அணிவகுக்கப்போகுதோன்னு நினச்சப்படியே இவர் போட்ட, சே பேசினதை எட்டியிருந்தே ரசிச்சப்படி இருந்தேன் .  

 என் வேலையில் மும்மரமானேன் , அவர் வாங்கினதை எடுத்துப்போட்டுக்கொண்டு , என்னுடன் பேசியப்படியே ட்ராலி தள்ளிக்கொண்டு வந்தவர் , " சே என்ன ட்ராலி இது !!  வீல்ஸ் சரியாவே இல்ல ! எப்படி இதக்கொண்டு , வாங்கி முடிக்கறது "  என்று அலுத்துக்கொண்டார் !

அப்பாடா ! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ! பின்ன நானெல்லாம் எத்தனை கஷ்டப்பட்டிருப்பேன் ந்னு மனதில் நினைத்துக்கொண்டேன் !

சமாளித்தவாறே வந்தவருக்கு , பொறுமை டாடா பை சொல்லியதை உணர்ந்தேன் ! அங்கு சாமான்களை அடுக்கியவாறே இருந்த ஹைப்பர் மார்க்கெட் யுனிபார்ம் போட்டவரிடம் ஆரம்பித்தார் ! " என்னங்க..இது , நல்ல ட்ராலி வைக்கமாட்டீங்களா..சரியில்லன்னா டிஸ்போஸ் செய்ய வேண்டியதுதானே "  என்று ! ஆங்கிலத்தில் பொரிய !
அவருக்கு மிக தர்ம சங்கடமாய்,  நெளிந்தார் . சுற்றி பலர் கூட ஆரம்பிக்க நானும் ,( உள்ளுக்குள் ஐயோ பாவம் ந்னு இருந்தது , அவரப்பாக்க )

" இப்படித்தான்  பல , சூப்பர் மார்க்கெட்ல இருக்கு , அவர் என்னங்க செய்வார் பாவம் "  எனவும்  , இவர் உடனே 

 " இதெல்லாம் விடக்கூடாதும்மா " ....! 

போச்சுடா ந்னு மனதுக்குள் இவர் கோபத்தை ரசித்தவாறே என் மன லிஸ்ட்ல் இருந்த சாமான்களை ட்ராலிக்குள் நிரப்பக்கொண்டிருக்க அடுத்த 6 அடி நகர்வதற்குள் மீண்டும் எரிச்சலுற்று இம்முறை கஸ்டமர் கேர் , சூப்பர்வைசர் அனைவரையும் அழைத்து , "  ஏன் இப்படி கஸ்டமர் கஷ்டம் புரியாமல் இருக்கீங்க !! "  ந்னு சற்று காட்டமாகவே இந்த முறை குரல் தந்தார் !

(இந்த ட்ராலிகள் இருக்கு பாருங்க ,  எப்பவும்
நாம ஒரு பக்கம் இழுத்தால் அது இன்னொரு பக்கம் தள்ளும்..அதிலும் முழுக்கொள்ளளவும் கொண்டால் நம்மை நார்மலா மூச்சு வாங்க விடாது ! குப்புறத்தள்ளிதான் வேடிக்கைப்பார்க்கும் , தனித்தெம்பு வேணும்ன்னு நினச்சுப்பேன் !
இதே ட்ராலிகளில் குழந்தைகள் செய்யும் அட்டகாசங்கள் , அதுக்கு வாய் இருந்தா அழுதுடும் ! :D , கத்த வித்தை அத்தனையும் பசங்க அதில் தான் காட்டுவாங்க..!  எத்தனை அனுபவிச்சிருக்கோம் , சும்மாவா :) )

என்ன தான் நடக்குது பார்ப்போமே ந்னு எனக்கு ஆவல் அதிகரிக்க , நமுட்டு சிரிப்புடன் ரசித்தப்படி நின்றிருந்தேன் !

செக்யூரிட்டி வெளியில் இருந்து ஒரு புது ட்ராலியுடன் , எங்க சாமான்களை மாற்றித்தந்து , சாரி கேட்டார்.

உடனே ஒரு நோட் தந்து அதில் கம்ப்ளைண்ட் எழுதித்தர சொன்னார்கள் ! அதை மிக கவனமாக செய்தார், என்னவர்  ! வெற்றி பெருமிதத்துடன் வந்தவர் " இதெல்லாம் பாத்துட்டு பயப்படாமல் கேட்டு வாங்கணும் இல்லன்னா காரியம் நடக்காது"  ம்பார் ந்னு எதிர்பார்த்தேன் ..இல்லை பொழைச்சார் ! :p

பின்ன சும்மாவா எத்தனை கேட்டிருப்போம் ! இவர்கிட்ட ... ;)


 சமீப வருஷங்களில் நான் பார்ப்பது  என்னவரிடம்  .
..நோ காம்ப்ரமைஸ் , ஏன் பண்ணிக்கணும் என்பார் , ஹோட்டரில் தோசை கருகியிருந்தாலோ , சப்பாத்தி குறையா இருந்தாலோ கூப்பிட்டு தந்து வேற மாத்தித்தர சொல்வார் ! எனக்கு ஆச்சர்யம் பிடிங்கி திங்கும் :) 

மறுப்பேச்சின்றி செய்வர். ஆனா வேற யாரும் அந்த சமயத்தில் கேட்காமல் ,நாம குரலை உயர்த்திக்கேட்பது என்னவோ போலிருக்கும் எனக்கு :)

இங்கு கஸ்டமர் கேர் பார்ப்பார்கள் , எதுவும் தவறென்றால் திருப்பித்தருவார்கள் , பொருட்கள் வாங்கி வீட்டுக்கு குறித்த நாளில் அனுப்பவில்லை என்றால் விட்டு கிழிக்கலாம் தயங்காமல் !

நானும் கொஞ்சம் மாறிருக்கேன் அது வேற விஷயம் ! பின்ன இத்தனை வருஷமா ஒண்ணா  குப்பைக்கொட்டறதுக்கு அப்பறம் அர்த்தமே இல்லாமல் போயிடுமே :)

5 வருடங்களுக்கு முன்..  (சின்ன பிளாஷ் பேக் தான் .. )
ஊரில் , திருச்சியில் ஹெல்த் செக்கப்க்கு அமர்ந்திருந்தோம் ..சரியான , முறையான வழிகாட்டல் , ஆர்டர் படி இல்லாமல் இஷ்டத்திற்கு அலைக்கழித்தனர் . டாய்லெட் க்கு சில முறை சாம்பில்ஸ் எடுக்கப்போனோம். ரொம்ப மோசமான அனுபவம் , ஹெல்த் செக்கப் பிற்கு 4500 போட்டிருந்தார்கள் , ஆனால் சுகாதாரமாக இல்லை ! இவர் என்ன செய்யப்போறாரோன்னு நினைத்தப்படி இருந்தேன் .

 அதே போல , (நம்ம கெஸ் தப்பாகுமா  ;) ) முடிந்து வெளியே வரும்போது ரிசப்ஷனில் இங்கே கம்ப்ளைண்ட்ஸ் , feed back எங்கே தரணும் என்றார் , ரிசப்ஷன் பெண் வித்யாசமாக பார்த்தப்படி , அதோ அங்கப்போங்க ந்னு  கைக்காட்டினார் ! 

அந்த டேபிளில் ஒருவர் தந்த ரெஜிஸ்டரில் எழுதிவைத்ததோடு இங்கே அட்மினிஸ்ரேஷனில் யார் இருக்காங்க , இன்சார்ஜ் என்று அவர் ரூம் போனோம்  , ஒரு கிழி , 
அவர் " சார் ! ..நீங்க ..எங்கருந்து வர்றீங்க ? ’”, 

ஊர் சொன்னதும் , குரலில் , பணிவைக்காட்டி( அதானே , பின்ன , நம்ம பிஹேவியர் பாத்தா , அன்னியன் அம்பி நினப்பு வந்துடுமே தானாவே ) , " சார் , பக்கத்துல  இன்னொரு பில்டிங் கட்டறோம் சார் ! அதை ஓப்பன் செஞ்சுடப்போறோம் சீக்கிரமே ..நீங்க அடுத்த முறை ஹெல்த் செக்கப் வரும்போது பாருங்களேன் "  என்று பூசி மொழுகிட வெளியே வந்தோம் !

வீட்டில் என் தங்கையிடம் விளக்க அவள் சொன்னாள் .." போதும் போ ! இது இந்தியா ! நீங்க வெளில வந்ததும் உங்களப்பத்தி கமெண்ட் செஞ்சுதான் சிரிச்சிருப்பாங்க ! இது மாதிரி எத்தனை பேரைப்பார்ப்பாங்க ! அல்ட்டிக்கவே மாட்டங்க "  .

இருக்கட்டுமே , சொன்னோம்ங்கற திருப்தி நமக்கு என்று வழக்கமான பல்லவி பாடிய நான் , சென்ற வருஷம் பிரபல மருத்துவமனையில் நிகழ்ந்ததை சொல்கிறேன் அடுத்தப்பதிவில் ....

Saturday 22 August 2015

உதவியும் , உபத்திரவமாகலாம்.

காலையில் போன்... 
பேசியவள் நாங்கள் குடியிருந்த பில்டிங்க்கு மூன்று பில்டிங் தள்ளி குடியிருந்த கோவையை சேர்ந்த தமிழ்ப்பெண் .
."சுமீ ..கொஞ்சம் வீடு வரை வர்றீங்களா.."

"எதுக்கும்மா.."

"வாங்களேன் ...சொல்றேன் ..அர்ஜெண்ட்.." 

பாவம் என்ன கஷ்டமோன்னு நினைத்து,என் பக்கத்து பில்டிங் ல் இருந்த இன்னொரு தமிழ் ஃப்ரெண்ட் க்கு போன் பண்ண..அவங்களும்," எனக்கும் ,அவ ஃபோன் பண்ணினா, வர்றீங்களா ஒரு எட்டு பாத்திட்டு வந்திடலாம்,என்னன்னு தெரியலயே,பாவம் " என கிளம்பினோம்..

போன் செய்தது ,தமிழ் பெண் தான்..பார்க்கில் அறிமுகம் , கைக்குழந்தையுடன் வசித்துவந்தாள்.., அங்கு நாங்கள் இருந்த ஏரியாவில் , தமிழோ , இந்தியர்களோ பார்ப்பதே அரிது , ஏன் அதிகம் கிடையாது என்றே  சொல்லலாம்  ! ..

தமிழ் பேச்சுக்கேட்கவே ஏங்குவோம் .. ( தமிழ் பாடல்கள் , டிவி ,  மூவி ..மூச் ..ஒண்ணும் கிடையாது ! ..மெயின் துபாய் ஏரியாக்கு வந்தால் தான் சில தியேட்டர்கள் , ஒரிஜினல் வி.ஹெச்.எஸ் , கேசட்கள் வாங்கலாம்.. )

உதவி,அவசரம் என்றதால் போட்டது..போட்டபடி அவசர ,அவசரமா விரைந்தோம்.
 வீட்டு பெல் அடித்தால் ,அவள் கதவே திறக்கவில்லை ..

இந்த பக்கம் வாங்க,என பால்கனி பக்கம் குரல் வர,அவள், இப்படியே வாங்க! என்றாள்..
விழித்தவாறே..நாங்கள் இருவரும் பால்கனி சுவர்(சிறியது ,க்ரவுண்ட் ப்ளோர் ) ஏறிக்குதித்து உள் சென்றோம் .
அவள் சுவரை வெறித்துப்பார்த்தவாறே ,
 "எங்கம்மாவை எரிச்சாங்களே! அப்ப சுட்டிருக்குமா" என தூக்கிவாரிட, நாங்கள் (அவள் அம்மா,அவளது திருமணத்திற்கு முன் இறந்ததில் அவள் பாதிக்கப்பட்டிருப்பாள் என மனதில் நினைத்து ),ஆறுதல் கூறி ,குழந்தையை எடுத்து ,கையில் தந்து..மனதை தேற்றினோம்..

(வீட்டு சாவியை எங்கோ வை த்துவிட்டாளாம்,எழுந்துஎடுக்ககூடமுடியாமல்..எங்கள் பால்கனி எண்ட்ரி, வர சொன்னேதே அப்படி அவள் தான்  !!)

"நீ எதாவது சாப்டியா ,வேணுமா " என்பதற்கு, "ம்ம்..அவர் ஆபிஸிலிருந்து ,வந்துடுவார் ,இன்னும் நா சமைக்கல " என்றாள்.

 நாங்கள் ,இருவரும் இரக்கம் மேலிட..அவளிடம் கேட்டு,கேட்டு அவர்களுக்கு தேவையான மதிய உணவு ரெடி பண்ணி..வைக்கவும்
அவள் கணவர் உள்ளே வரவும் சரியாக இருந்தது..அதுவரை உட்கார்ந்திருந்தவள்..பட்டென எழுந்து...டைனிங் டேபிளில் தட்டுடன் அமர்ந்து,அவர்க்கும் பரிமாறி சாப்பிட்டு முடித்தாள் .

எங்கள் பக்கம் ,திரும்பி..
" உங்களுக்கு கொஞ்சம் கஞ்சி வச்சுத்தரட்டுமா" எங்களுக்கு(ஷாக்குக்கு மேல் ஷாக் ) என்ன சொல்வதறியாமல்.." இல்லம்மா! நாங்க ,வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறோம்" என்று விட்டால் போதும் என வந்தோம் ..நன்றாக வாசல் வரை வழியனுப்பினாள்.
அவள் கணவருடன் ,அவள் நார்மலா பேசியதும்,அவரும்' எல்லாமே' நார்மலாக இருப்பதுவும் போல நடந்துகொண்டது...நாங்கள் நார்மலா??!! என்ற சந்தேகத்துடன் வீடு வந்து சேர்ந்தோம் ...

இது 12வருடங்களுக்கு முன் நடந்தது...அது புதிதாய் டெவலப் ஆகிக்கொண்டிருந்தப்பகுதி..MultiNationality Environment .

"உதவி செய்யபோய் உபத்திரவம்" ஆன சம்பவம்.
அதிலிருந்து அவள் போன் வந்தால் ...அலார்ட் ஆகிடுவோம்.
.
பின்னாளில் ..நிறைய பேர் அந்த பகுதியில் இதேபோல் அவளைப்பற்றி ..வெவ்வேறு அனுபவங்களைக் கூறக்கேட்டோம்...

இன்னமும்..மறக்காத இந்த சம்பவம், இப்போதும் உதவி என யார் கேட்டாலும் இது நினைவிற்கு வந்துப்போகும் ..
smile emoticon smile emoticon

வீடு தோறும் வரவேற்கும் துணி மலைகள்

துணியா..மலையா..!
பிஸினஸ் மேனேஜ்மென்ட் , ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் படிச்சவங்களும். சறுக்கி தொபுக்கட்டீர் ஆகும் இடம். நம் வீட்டு துணி மேனேஜ்மெனட்டிடம் தான்.
வீட்டில் மனைவி , அம்மா, அட , அட்லீஸ்ட் ஒரு பெண்ணின் இருப்பை வெளிக்காட்டுவதில் பாத் ரூம் க்கு அடுத்தப்படியா துணிகள் & கப் போர்ட்ஸ் தான்..
பளீச்சுன்னு பல் இளிச்சுக்காட்டறது மேற்படி விஷயங்கள் ...
வீட்டில் பெண் உடம்புக்கு முடியாமல் படுத்தாச்சுன்னா வெளிப்படும் இன்ஸ்டண்ட் துணிக்குன்றுகள்..
எப்படி முளைக்கும்..எங்கிருந்து முளைக்கும் என தெரியாது..ஆனால் விழி பிதுங்கி , சோபாலயும்..சேர்களிலும்..அட்டினக்கால் போட்டு உட்கார்ந்திருக்கும்..
இந்த துணிகள் படும் பாடு கெஸ்ட்ஸ் வந்தால் அவ்வளவுதான்.. பாவம்..அத்தனையும் இருந்த சுவடே தெரியாமல்..அலமாரியில் மூச்சுமுட்டி சுவாசம் போயிருக்கும்.
( வீட்டுக்கு வரேன்னு போன் வந்ததும் வீடே சாவிக்கொடுத்த மாதிரி இருக்கும்..அதே சொல்லாமல் வந்தால் சாமி வந்த மாதிரி இருக்கும் !! )
சரி..நாம மடிக்கலன்னா..யாருமே மடிக்க மாட்டேங்கறாங்களே விட்டு தான் பார்ப்போமேன்னா..
அந்த குன்றில் இருந்து ஒரு சாக்ஸ் , ஒரு பனியன் எடுப்பது இமாலய சாதனையாக..குப்பையைக்கிளரும் நல் கோழியாக..வெற்றிப்பெருமிதத்துடன் ஆபீஸ் , ஸ்கூல் , காலேஜஸ் டயமாச்சு என்ற ஓலத்துடன் வீடே காலியாகும்.
சிலசமயம்..சே ! பனியனே கிடைக்கல..நானே இனி என் துணியை துவைச்சுக்கறேன்..என்று இண்ஸ்டண்ட் சவால்கள் பிறக்கப்பட்டு..வாஷிங் மெஷின் ஓவர்டைம் டியூட்டி பார்க்கும்..!
சரி காய்ஞ்சதும்..அதே கதை..! துணி மலை.!
( அதை அயர்ன் செய்யக்குடுப்பதும்..திருப்பி கடன் கொடுத்த சேட் மாதிரி சேஸ் பண்ணி வாங்குவது கிளைக்கதைகள் :p)
வீக் எண்ட் ஷாப்பிங் , பெஸ்டிவல் ஆபர் , ஆடித்தள்ளுபடில அடிச்சுபிடிச்சு வாங்கினதா..டிரையல் ரூமிலும் , வீட்டில் பேஷன் பரேட் செஞ்சு பார்த்தவை ரெண்டு நனைப்பிற்கு பின் சீந்துவாரின்றி..என்னைப்பார், மடித்துப்பார் என்று துணிக்குவியலலில் முதல் ஆளாக..வரவேற்கும்.
கிடைக்காத சினிமா டிக்கெட் புக் செஞ்சு..அடிச்சு பிடிச்சு..கொஞ்சம் முன்னாடியே போய் , காத்திருக்கும்போது..பிள்ளைகளின் உடையைப்பார்க்க..மானம் ப்ளைட் ஏறி போயிருக்கும்..!
எடுக்க ஈஸியாக இருக்க வேண்டுமென, அலமாரியில் முதலில் இருக்கும் (அயர்ன் பண்ண தேவையில்லாதது முதலிடம் wink emoticon ) ட்ரெஸ்களில் முந்தி வந்து உட்கார்ந்து பல்லிளிக்க பார்க்கும் குழந்தைகள் அன்றைய பெற்றோரின் கருத்து மோதலுக்கு காரணமாக இருப்பார்கள்..!
" நான் ஒருத்தியே தினமும் துணி மடிச்சு வைக்கறேனே" " ஏன் நீங்கல்லாம் செய்யக்கூடாதா..அட்லீஸ்ட் மடிச்சு வச்சதையாவது உங்க கப் போர்ட்ஸ்ல வைக்கலாம் இல்ல.."
என்ற கூவலுக்கு முன் அனைவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் போயிருப்பர்..!
அனைத்தும் அஸ்தமனமாகி , துணிகள் மடித்து அலமாரிக்குள் தஞ்சம் புகுந்த பின் திறந்த புத்தகங்கள் மூடப்பட்டு , தலைகள் மெல்ல தென்படும்..கூடுதலாக.. " அப்படியே இருந்தா தான் என்ன.!! . ஒரு பக்கம் .. அது பாட்டுக்கு இருக்கு..உன்ன என்னப்பண்ணுது" 
என பரிந்துரைகள் முன் வைக்கவும்படும்.

சோபா..சேர்களுக்கு..மோட்சம் தர லாண்டரி கூடை..எத்தனை யோ மாடர்ன் துணி அடைப்பான்கள் வாங்கினாலும் அனைத்தும் ஹவுஸ்புல்லாகி , பீ கேர்புல் என மிரட்டும் !

எதுல காசு போட்டாலும் போடு ஆனா இந்த துணில மட்டும் காசு போடத..என வீட்டில் அந்தக்கால பாட்டியோ தாத்தவோ சொன்னது அவ்வப்போது அசரீரியாகக்கேட்கும்..

அத்தனையும் ஆவியாகும்..இன்னொரு ஆடிதள்ளுபடி வரும் வரை...!!

Monday 17 August 2015

திருமாலை அறிவோமா ...

திருமாலை
நாலாயிர திவ்யப்பிரபந்தம் 12 ஆழ்வார்களால் அருளப்பட்ட தமிழ் பக்தி இலக்கியம் , பன்னிரு ஆழ்வார்களில் , சோழ நாட்டில் பிறந்து திருவரங்கத்தில் பூ மாலையும் , பாமலையும் தொடுத்து பக்தி தொண்டு புரிந்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார் !
இவரைப்பற்றி எழுதியது நம் நினைவிற்கொண்டு..அவர்தம் பாசுரம் காண தொடர்வோம்..!
திருமாலை - 10 .
நாட்டினாந்தெய்வமெங்
காட்டினான் திருவரங்கம்
உய்ப்பவர்க்கு உய்யும்வண்ணம்
கும் நல்லதோரருள்தன்னாலே
கேட்டீரோ நம்பிமீர்காள்! கெருடவாகனனும் நிற்க
சேட்டைதன்மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே !!
பாசுர விளக்கம் :
சேட்டைதன்மடியகத்து - ஜேஷ்டா தேவி - திருமகளின் தமக்கையார் - மூதேவியிடத்தில் (தரித்திரத்தைக்கொண்டவர் )
செல்வம் பார்த்திருக்கின்றீரே ! - செல்வம் வேண்டுமென யாசித்து இருக்கிறீர்களே !!
நாட்டினாந்தெய்வமெங்கும் - எல்லா இடங்களிலும் தெய்வங்களை -பல தேவதைகளை ஆங்காங்கே இறைவன் பல மக்களும் தொழுவதற்காக நிலை நிறுத்தியுள்ளான் .
(தான் சத்வமே வடிவானவன் -சாத்வீக சுபாவத்திற்கு ஏற்ற தெய்வம் )
நல்லதருள் தன்னாலே - தனது அருளால்..
உய்ப்பவர்க்கு உய்யும் வண்ணம் - முக்தி வேண்டுபவர்க்கு , அதை தரும் வண்ணம்
காட்டினான் திருவரங்கம் - திருவரங்கம் வாழும் அரங்கனை காட்டினான்...
கேட்டீரோ நம்பீர்காள் கெருடவாகனனும் நிற்க -
கருடனை வாகனமாகக்கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பற்றுங்கள் கேட்பீர்களா..!
விளக்கம்
ஆழ்வார் முந்தைய பாசுரங்களில் , பரமபத நாதரை பின்பற்ற கூறுகையில் அவ்ர் இருப்பது வைகுண்டம் அங்கு செல்வதும் , வழிபடுவதும் கடினம் என்பதால் ராமனை , கண்ணனை பற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்.
அதிலும் ராமன் , கண்ணன் வாழ்ந்த காலம் ஆழ்வார் காலத்துடன் வேறுபட்டதால் , எளிதில் பின்பற்ற வேண்டிய தெய்வமாக திருவரங்கத்தில் பள்ளிக்கொண்டிருக்கும் அர்ச்சாவதார மூர்த்தியாகிய பெரிய பெருமாளை குறிப்பிடுகிறார்.
மனிதர்களில் மூவகைகுணங்கள் ராஜஸ , தாமஸ , சாத்வீக என்பதற்கேற்ப , அவரவருக்கேற்ப தெய்வங்களை நிலைனிறுத்திருக்கிறார் பரம்பொருள் !
சாத்வீக குணமுடையவர் பற்றக்கூடிய தெய்வமாக இருப்பவர் கருடனை வாகனமாகக்கொண்ட மஹாவிஷ்ணு - அரங்கன் ..(மற்ற தேவதைகளின் மூலம் முக்தியை தருபவரும் அவரே ) !
அவரே மோட்சம் அருளுபவர் ஆவார் இவரை விடுத்து மற்ற தெய்வங்களிடம் முக்தியை வேண்டுவது
செல்வங்களை தரும் திருமகள் இருக்க , அவளின் தமக்கையான (தரித்திரத்தில் இருக்கும் ) மூதேவியிடம் செல்வம் யாசிப்பதற்கு சமம் என்கிறார்.
அடுத்த பாசுரம் காண்போம்.
தொண்டரடிப்பொடியாழ்வார் பாதம் பணிந்தே !!

Thursday 6 August 2015

மயக்கிய மரப்பசு

சிறு வயதில் பார்த்த ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் , அவர்கள் , அவள் ஒரு தொடர்கதை மனதை லேசாக அந்த  வயதிலேயே அசைத்துப்பார்த்தவை !

பெண்மையை நிலவுக்கும் , மலருக்கும் ஒப்பிட்டப்போது , அவளின் இன்னொரு பரிணாமத்தை பல பெண்களுக்கே காட்டிய கதைகள் எனலாம் !

அப்போது
கிராமத்தில்,  நான்  சந்தித்த ராமாயி வாழ்ந்த ஆண் துணை இல்லா வாழ்க்கை எப்படி சாத்தியம் என்றும் அவர் மகள் சின்னாத்தாள்  கணவர் இறந்துவிட கொழுந்தனையே மணம் முடித்து , அவனும் விட்டுச்சென்றிட அவள் ஒரே பையனுடன் வாழ்ந்த வாழ்க்கையும் , இப்படியும் பெண்கள், அவர் தம் வாழ்கையா என்று  பல முறை சிந்தனை விதைகளை தூவி இருக்கின்றன.

எப்படியும் வாழலாம் என்று சிலர் , இப்படித்தான் வாழ வேண்டும் என்று பலர்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்படித்தான் அந்த புத்தகத்தை ஆரம்பித்தேன். நடை நான் பிறப்பதற்கு முந்தைய காலத்தில் அமைந்ததால் முதலில் ஒரு மிரட்டல் , பின் ஆழ்ந்துப்போக செய்தது !

ஒரு கதா பாத்திரம் ஏற்படுத்தும் பாதிப்பும் , பிரமிப்பும் ஒரு நாளேனும் அதைப்படித்தவரது மனதில் வாழ்ந்தால் அது கதாசிரியருக்கான வெற்றி எனலாம்.

இந்த அம்மணி கதாபாத்திரம் ரெண்டு பாகமாக நம் மனதில் வாழ்கிறார் , காலங்கள் மாறினாலும் , காட்சியமைப்புகளை  கண்முன் கொண்டு வருகிறார் ஆசிரியர்.

ஒரு ஆத்மாவின் குரலாக நடை  குழந்தைப்பிராயத்திலிருந்து ஆரம்பிக்கும் கதையாக , மெல்ல ஊர்ந்து வளர்ந்து , முடிக்கிறது .

என்ன நாவல் என்று ஊகிக்க முடிந்ததா ??

தி.ஜானகிராமன் அவர்களது மரப்பசு .

தலைப்பே யோசிக்க வைத்தது , கோவில்களில் வாகனங்கள் பார்க்கலாம் , யானை , குதிரை , காமதேனு இப்படி.. மரத்தில் செய்து , உற்சவக்காலங்களில் புதுப்பொலிவுடன் பவனி வரச்செய்வர் இறையுருவங்களுடன் .

மற்ற நாட்களில் , மண்டபங்களில் காட்சிப்பொருளாக , பிரம்மாண்டமாக  உயிரோ  , உணர்வோ இன்றி ஒரே மாதிரி தோற்றமளிக்கும்.

மரக்கட்டையால் உருவங்கள்  அலங்கரிக்கப்படலாம் உயிருடன் உலாவர முடியாது !

இப்படித்தான் படைக்கப்படிருக்கிறது மரப்பசு கதானாயகி பாத்திரம் !

ரெண்டு பாகங்கள் ! கணையாழியில் தொடராக  வெளியான கதை , தொகுக்கப்பட்டு பிற்காலத்தில் நாவலாக்கப்பட்டிருக்கிறது .

பெண் எழுத்தாளர் ஆணைப்படைப்பதற்கும் , ஆண் எழுத்தாளர் பெண் கதாபாத்திரம் படைப்பதற்குமான வித்யாசம் இதில் அறிய முடிகிறது !

அன்னவாசல்.. புதுக்கோட்டை யை அடுத்த சித்தன்னவாசல் , இதை பூர்வீகமாகக்கொண்ட பிராமணக்குலத்தில் பிறந்தப்பெண் , சிறுவயதில் அவள் பார்த்த மனிதர்கள் , அவர்கள் தம் உணர்வுகள் , அதனால் அவளுக்கேற்பட்ட வெறுப்புகள் என கதையை ஆரம்பிக்கிறார் தி.ஜா அவர்கள். சிரிப்பு , எதற்கெடுத்தாலும் சிரிப்பு , துக்கத்திலும் ஆனந்தத்திலும் .. !

ஸ்பரிசம் , தொடுதல் ஒரு வேட்கையாக ஒரு குணாதிசியமாக படைக்கப்பட்ட அம்மணிக்கதாபாத்திரம் , பெற்றோரைப்பிரிந்து , சித்தப்பா , சித்தி வீட்டில் வளர்ந்துப்படித்து , ஒரு திருமணத்திற்காக தன் தந்தையின் வயதை ஒத்த கோபாலி என்ற கர் நாடக சங்கீத வித்வானை பார்க்கப்போக , அதே ஸ்பரிசம் , சிறு வயதிலே , இசையுடன் அவர் மேல் கொண்ட ஈர்ப்பால் அவ்ருடன் வாழ ஆரம்பிக்கிறார்.

இதில் எந்த விரசமோ , ஆபாசமோ இன்றி அம்மணியாக ஆசிரியர் மாறி சம்பவங்களை கோர்க்கிறார். காட்சியமைப்புகள் விரிகின்றன நம் கண்கள் முன்னே ! 20 வயதுப்பெண் , தியாகய்யர் , சங்கீத மும்மூர்த்திகள் சாட்சியாகக்கொண்டு , 60 வயதுக்காரருடன் காதல் வாழ்க்கை. எத்தனை முரண் !

தெரிந்து வளர்த்த பெரியம்மா , பெரியப்பா அவளைக்கண்டித்து அழைக்க , மறுத்து கோபாலியுடன் சேர்ந்திருத்தல் முதல் பாகமாக எழுதிருக்கிறார்.

தனக்கு உலகில் உள்ள அத்தனை உயிரனத்தையும் ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும் என்றும் திருமண பந்தத்தை வெறுத்த ஒரு வாழ்வை பெண் வாழ்வதாக அக்காலத்தில் வந்த கதை நிச்சயம் சலசலப்பை உண்டு பண்ணியிருக்கும் என்று படிக்க படிக்க உணர செய்கிறது.

முதல் பாகத்தில் அம்மணியின் ஆரம்பக்கால வாழ்க்கை , ரெண்டாம் பாகத்தில் நடனப்பெண்மணியாக உலகம் முழுவதும் சுற்றித்தீர்த்த 300 ஆண்களை ஸ்பரித்த பெண்ணாக , மது அருந்தும் கம்யூனிசம் பேசும் ஆண் சகவாசம் கொண்ட பெண்ணாக சித்தரிக்கப்படுவது பெண் எழுத்தாளருக்கு சாத்தியமா என்றால் , அது சற்றே ஐயப்பாடான நிலை தான் !

கதாசிரியர் தான் ஆண் என்பதை மற்ற பெண்களை வர்ணிக்கும் போது அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் .

பல ஆண்களைப்பார்த்தும் , தன்னை விட இளையவனான பட்டாபி என்பவனுடன் உயிருள்ள பெண்ணாக வாழ விரும்புவதாகவும்  , மரப்பசு போல தான் வாழ்ந்ததை விளக்க பச்சையப்பன் , அவன் மனைவி மரகதம்  என்ற ரெண்டு பாத்திரங்கள் கதாசிரியருக்கு கைக்கொடுக்க .. கதையும் முற்றுப் பெறுகிறது !

எத்தனை நுணுக்கமான படைப்பு , பாத்திரங்களின் செதுக்கல்கள் என தேர்ந்த கதை சொல்லியாக கவர்கிறார். தி.ஜா.

படித்ததும் ..கிராமத்து  ராமாயி , சின்னாத்தாள் ,நகரத்து  மணம் புரியா கௌசல்யா , வித்யா டீச்சர்களும் கண் முன் வந்து சென்றனர் . ஆழ்ந்துப்படித்தால் .மீள்வது கடினம் தான்.
மரப்பசு மரபுக்கதையாக மயக்கம் தந்து மனதை ஆள்கிறது !

எனக்கு இக்கதைப்படிக்கும் போதெல்லாம்..விஷூவலாக ஹீரோயினாக நடிகை  லஷ்மி மனக்கண்  வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை !

ரசனை , அந்த கால கட்ட வாழ்க்கை முறை , கதாசிரியரின் கதை சொல்லும் நேர்த்தி அறிய அவசியம் மரப்பசு படிக்கலாம்.

மீண்டும் அடுத்த நாவலுடன் சந்திக்கிறேன்..அடுத்தது நிச்சயம் சரித்திர நாவல் தான் .